ரஜினியின் “பேட்ட” பொங்கலுக்கு பராக்..!

ஜினி ரசிகர்களை குஷி படுத்தும் வகையில் தற்போது ‘பேட்ட’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ‘காலா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி முழு நேர அரசியல் வாதியாக உருவெடுப்பார் என அனைவரும் எதிர்ப்பார்த்த நிலையில், திடீர் என இளம் இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆனார்.

இந்த படத்தில் இதுவரை ரஜினியுடன் ஜோடி சேராத நடிகையாக இருந்து வந்த சிம்ரன், திரிஷா ஆகியஇருவருமே நடிக்கிறார்கள். அதே போல் விஜய் சேதுபதியும் மிகவும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்திற்கு, அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரஜினி, மீண்டும் அரசியலில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது ‘பேட்ட’ படத்தின் புது போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் ரஜினி மற்றும் சிம்ரன் இருவருமே மிகவும் ஸ்டைலிஷ்சாக கையில் பூ ஜாடிகளை வைத்துள்ளனர். இருவரும் காதல் ஜோடிகள் என்பதை உறுதி செய்வது போல் சிரித்து கொண்டு சந்தோஷமாக நடந்து வரும் காட்சி தான் போஸ்டராக வெளியாகி உள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்ன வென்றால் ரஜினி மற்றும் சிம்ரன் இருவர் மட்டும் முன்னோக்கி வருவது போலவும்… மக்கள் பலர் எதிர் திசை நோக்கி செல்வது போலவும் உள்ளது. இதில் எதாவது கார்த்தி சுப்புராஜ் ட்விஸ்ட் வைத்துள்ளாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

லிங்கா படத்திற்கு பிறகு… ‘பேட்ட’ படத்தில் தான் ரஜினி மிகவும் ஸ்டைலிஷாக ஜீன்ஸ், டி- ஷார்ட் போட்டவாறு நடித்துள்ளார். மேலும் சிம்ரனும் ரஜினிக்கு ஏற்ற ஜோடியாக இருக்கிறார்… அதே போல் ‘பேட்ட’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்பதை போஸ்டர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர் படக்குழுவினர்.

Leave a Response