நேற்று ரஜினி, இன்று கமல் – ஏமாற்றும் குமபல்!

Kamal-Hassan-Rajinikanth

தமிழ் சினிமாவில் இப்போது தலைதூக்கும் முக்கிய பிரச்சினைகளில் சமூக வலைதள பிரச்சினையும் ஒன்று. FACEBOOK, TWITTER போன்றவற்றில் பிரபல நடிகர், நடிகைகளின் பெயரில் போலியான கணக்குகளை துவங்கி ரசிகர்களை ஏமாற்றி வருகிறது ஒரு கும்பல். இது போதாதென்று அவர்களை சில தேவையில்லாத பிரச்சினைகளிலும் மாட்டிவிடுகின்றனர்.

சமீபத்தில் கூட விடிவி.கணேஷ் பெயரில் உள்ள கணக்கில் இருந்து ரஜினியை பற்றி தவறான ஒரு செய்தி பரவியது. இது ரசிகர்களிடத்தில் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. பின்னர் அது தன்னுடைய ட்விட்டர் கணக்கு இல்லை என்று விடிவி கணேஷ் சைபர் க்ரைமில் வழக்கு பதிவு செய்தார்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் கமல்ஹாசன் ட்விட்டரில் உள்ளார் என்றும், அவரது கணக்கு @maiamkhaasan என்றும் சிலர் கூறிவந்தனர். இது குறித்து கமலின் பி.ஆர்.ஓ.விடம் கேட்டபோது, “உலக நாயகன் கமல் ஹாசன் ஃபேஸ்புக்கில் உள்ளார். அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தை எம்ஏஐஏஎம் குழு நிர்வகித்து வருகிறது.

இந்நிலையில் @maiamkhassan என்ற பெயரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் ஒரு கணக்கு துவங்கப்பட்டுள்ளது. இந்த கணக்கைப் பார்த்த ரசிகர்கள் கமல் தான் ட்விட்டருக்கு வந்துவிட்டார் என்று நினைத்து அவரை வரவேற்கத் துவங்கிவிட்டனர்.

ஆனால் உண்மையில் யாரோ விஷமி தான் கமல் பெயரில் போலி கணக்கை துவங்கியுள்ளார். மேலும் கமல் பெயரில் போலி கணக்கு துவங்கி அவரின் ரசிகர்களை ஏமாற்றியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் பி.ஆர்.ஓ. தெரிவித்துள்ளார்.