பிரதமர் மோடி 4 நாள்களுக்கு சுற்றுப்பயணம்: பாலஸ்தீனத்துக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர்..

170630080205-modi-flag-india-780x439

பிரதமர் மோடி பிப்ரவரி 9- முதல் 12 வரை 4 நாள்களுக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதலில் பாலஸ்தீனம் செல்லும் பிரதமர், யு.ஏ.இ., ஓமன் நாடுகளுக்கும் செல்கிறார் என வெளியுறவு துறை அறிவித்துள்ளது. பிப்ரவரி 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை அரசுமுறைப் பயணமாக, பிரதமர் மோடி, 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன்படி முதல் கட்டமாக பாலஸ்தீனம் செல்கிறார். அங்கு பாலஸ்தீன அதிபர் உள்ளிட்டோரை சந்திக்கிறார்.

அதன்பின்னர், யு.ஏ.இ. மற்றும் ஓமன் நாடுகளுக்கும் சென்று அந்நாட்டு தலைவர்களை சந்திக்கிறார். மேலும், அங்கு வாழும் இந்திய வம்சாவளியினருடனான சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என வெளியுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாலஸ்தீனத்துக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response