முதல்வர், துணை முதல்வர் கொடியசைக்க, சீறி வந்த கோயில் காளை! – களைகட்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது. முதலில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகைப்படம் எடுத்து கொண்டனர். முதல்வர் உறுதிமொழியைவாசிக்க, ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், ‘நாட்டு மாடுகளைப் பாதுகாப்போம், துன்புறுத்தமாட்டோம்’, என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

முதல்வரும் துணைமுதல்வரும் இணைந்து ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். வாடிவாசலில் இருந்து முதலாவதாக அலங்காநல்லூர் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது.

அதன் பின்பு அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது. தமிழக வரலாற்றில் ஜல்லிக்கட்டை ஒரு முதலமைச்சர் தொடங்கி வைத்தது இந்த ஜல்லிக்கட்டு என்று அறிவிக்கப்பட்டது. இதில் கலந்து கொள்ளும் சிறந்த வீரர்கள், மாடுகளுக்கு முதலமைச்சர், துணைமுதலமைச்சர், உள்ளூர் அமைச்சர்கள் சார்பாக பரிசுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ops eps

முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்கள் மேடையில் இருந்தபடி ஜல்லிக்கட்டு போட்டியை ரசித்தனர்.

ஜல்லிக்கட்டுப்போட்டிக்கு 1000 காளைகள், 1,241 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response