குமரி மாவட்டத்தில் மின்கம்பங்கள் சேத எண்ணிக்கை10,500 ஆக உயர்வு!

5a1fdd25c407c-IBCTAMIL

 குமரி மாவட்டத்தில் ஓகி புயலின் எதிரொலியாக கடந்த நவம்பர் 29ம் தேதி நள்ளிரவு கடுமையான சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் இதுவரை கண்டிராத கடும் சேதங்கள் ஏற்பட்டது. புயல் காற்று மற்றும் கனமழை தாக்கத்தால் பல வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் 2 ஆயிரத்து 391 பாதிக்கப்பட்டோர் 29 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். தற்போது வெள்ளம் வடிந்துள்ளதால் 24 முகாம்களில் இருந்தவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை கட்டாயப்படுத்தி போலீசாரும், வருவாய் துறையினரும் அனுப்பி வைத்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

சேத விபரங்கள் கணக்கெடுக்கப்படும் பணிகள் தினமும் கண்காணிப்பு அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு எஞ்சிய பணிகள் விரைவில் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. மாவட்டத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மரங்கள் தேசிய நெடுஞ்சாலையில் 171 மரங்களும், நெடுஞ்சாலையில் 846 மரங்களும், நகராட்சி சாலைகளில் 283 மரங்களும், பேரூராட்சி பகுதிகளில் 2639 மரங்களும், ஊராட்சி பகுதிகளில் 5313 மரங்களும் வெட்டி அகற்றப்பட்டுள்ளன.
குமரி மாவட்டத்தில் 7500 மின்கம்பங்கள் பழுதடைந்ததில், 4108 மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் புயல் காற்று வீசிச்சென்ற முதல்நாளில் மொத்தம் 985 மின் கம்பங்கள், 5 டிரான்ஸ்பார்மர்கள் மட்டுமே சேதம் என்று அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

 

30-1512031304-cyclone-ockhi15

நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 500 ஆக உயர்ந்துள்ளது. 42 டிரான்ஸ்பார்கள் சேதமடைந்ததில் 15 மாற்றி பொருத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று சேத மின்கம்பங்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 500 என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்நாளில் 985 மின்கம்பங்கள் சேதம் என கூறிய அதிகாரிகள் நாள்தோறும் மின் கம்பங்கள் எண்ணிக்கை அதிகரித்து காட்டுவது கணக்கெடுப்பு பணிகளில் உள்ள குளறுபடிகளை காட்டுகிறது. மேலும் ேதவைக்கு ஏற்ப உபகரணங்கள் இல்லை என்பதும், பணியாளர்கள் இருந்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மின்சார விநியோகம் 100 சதவீதம் சீராக மேலும் பல நாட்கள் ஆகும் நிலையே ஏற்பட்டுள்ளது.

Leave a Response