தொடர்மழையால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

201708211543352811_Mullai-Periyar-dam-water-level-reached-the-base-of-114-feet_SECVPF

நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்வதால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்கிறது. இதனால் 152 அடி உயரமுள்ள பெரியாறு அணையின் நீர்மட்டம், நேற்றைய நிலவரப்படி 122 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,004 கனஅடியாகவும், அணையிலிருந்து நீர் வெளியேற்றம் வினாடிக்கு 1,000 கனஅடியாகவும் இருந்தது. அணையின் இருப்பு நீர் 3,024 மில்லியன் கனஅடியாக உள்ளது. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 53.18 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 861 கனஅடியாகவும், அணையிலிருந்து வினாடிக்கு 960 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 2,438 மில்லியன் கனஅடியாக உள்ளது.

08-mullai-periyar-dam-4-600

57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 36.60 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 3 கனஅடியாகவும் இருந்தது. அணையின் இருப்புநீர் 143.82 மில்லியன் கனஅடியாக உள்ளது. 126 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணையின்  நீர்மட்டம் நேற்று 99.38 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையிலிருந்து நீர் வெளியேற்றம் வினாடிக்கு 30 கனஅடியாகவும் இருந்தது. அணையின் இருப்பு நீர் 60.09 மில்லியன் கனஅடியாக உள்ளது. மழையளவு : பெரியாறு  3.4 மி.மீ,  தேக்கடி  11 மி.மீ, கூடலூர்  4 மி.மீ, பாளையம்   2.6 மி.மீ, வைகை அணை   4.8 மி.மீ, மஞ்சளாறு   3 மி.மீ, சோத்துப்பாறை   9 மி.மீ மழை பதிவாகி இருந்தது.

Leave a Response