காற்று மாசுபாடு எதிரொலி: ஹரியானா முதல்வரை சந்தித்து பேசினார் அரவிந்த் கேஜ்ரிவால்!

delhi-pollution

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கத்தாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தில்லியில் நிலவும் காற்று மாசுவுக்கு அண்டை மாநிலங்களான ஹரியாணா, பஞ்சாபில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

 

இந்த விவகாரம் தொடர்பாக ஹரியாணா, பஞ்சாப் மாநில முதல்வர்களுக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடந்த வாரம் கடிதம் எழுதினார். அதில், மேற்குறிப்பிட்ட மூன்று மாநிலங்களிலும் நிலவும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்காக அவர்களுடன் ஆலோசனை நடத்த விரும்புவதாக கேஜரிவால் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இன்று அவர் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கத்தாரை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கேஜ்ரிர்வால் இந்த சந்திப்பு சாதகமான போக்கை ஏற்படுத்தியுள்ளது.
தில்லியில் ஏற்பட்டுள்ள தற்போதையை நிலையை சமாளிக்க கூட்டு முயற்சியுடன் அனைத்து நடவடிக்கைகளைய்யும் எடுப்போம் என்று கூறினார்.

Leave a Response