கிர் வனப்பகுதியில் சிங்கங்களை துரத்தியவர்கள் கைது!

singkam

குஜராத் மாநிலம் கிர் காடுகளில் இரண்டு சிங்கங்களை இரு சக்கரன வாகனத்தில் சென்ற இளைஞர்கள் துரத்தியது தொடர்பான வீடியோ, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வியாழக்கிழமையன்று வைரலாக பரவியது.

இந்த நிலையில் அந்த சிங்கங்களை துரத்திய இளைஞர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், குஜராத்தின் கிர் வனப்பகுதியில் நான்கு இளைஞர்கள் இரண்டு இரு சக்கர வாகனங்களில் அங்கிருந்த சிங்கங்களை துரத்தியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிக்க அந்த சிங்கங்கள் வேகமாக ஓடும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

அதில் பதிவான காட்சிகளில் அடிப்படையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய இளைஞர் ஒருவரை ராஜ்கோட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்தோம். இதனைத் தொடர்ந்து அவரது இரு நண்பர்களும் கைது செய்யப்பட்டனர்.

kaithu

அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றிய நான்காவது நபரை தேடி வருகிறோம்’’ என்றனர்.

மேற்கு குஜராத்தில் அமைந்துள்ள கிர் சரணலாயத்தில் ஆசிய சிங்கங்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளன.

ஆசிய சிங்கங்களின் ஒரே இயற்கையான வாழிடமாக உள்ள கிர் காடுகளில் சமீப காலமாக சமூக விரோதிகள் சிலர் புகுந்து சிங்கங்களுக்கு தொல்லை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Response