மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நள்ளிரவில் நடந்த பயங்கரம் !

raajaji
சென்னை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள மெரியன் கிளப் கட்டடம் திடிரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளனது. மேலும் அப்பகுதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பல இடங்களில் இது போன்று பழைய குடியிருப்புகள், கட்டடங்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வருகின்றன. இவற்றை பராமரிக்கவோ அல்லது புதுப்பிக்கவோ தமிழக அரசு தவறிவிட்டதாக மக்களிடையே பொதுவாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.

சென்னை ராஜாஜி சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ளது மெரியன் கிளப் கட்டடம். இரண்டு மாடிகளைக் கொண்ட இந்த கட்டடம் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது.
rajaji
இந்த கட்டடம் நேற்று நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போது அங்கு பணியில் இருந்த காவலாளி இந்த விபத்தில் சிறிய காயங்களுடன் தப்பினார்.

இது குறித்து தகவலறிந்த காவல் மற்றும் தீயணைப்புத் துறையினர்.கட்டட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தால் ராஜாஜி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் பார்வையிட்டு மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டார்.

Leave a Response