‘காங்கிரஸ் கட்சி கரையான் அவற்றை அடியோடு அப்புறப் படுத்துவேன்’-மோடி ஆவேசம்!

“செய்த பாவத்துக்கு தண்டனை அனுபவிக்கிறது காங்கிரஸ் ” என்று கூறிய பிரதமர் மோடி, நான் இந்த நாட்டின் இரும்பு மனிதரின் சீடர்… ஒரு போதும் பதற்றம் அடையமாட்டேன் என்று கூறினார். மேலும், தனது கட்சித் தலைவர்கள் மீது காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இழந்து விட்டதால், மாற்றுக் கட்சிகளில் இருந்து துடிப்பான தலைவர்களை காங்கிரஸ் தேடிக் கொண்டிருக்கிறது என்று சாடினார் பிரதமர் நரேந்திர மோடி.

1478753035-728
ஹிமாசலப் பிரதேசத்தில் வரும் 9ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் மோடி. ஹிமாச்சலப் பிரதேசத்தின் ராய்ட் பகுதியில் பிரதமர் மோடி, பாஜக., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது, “பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட நாளான நவம்பர் 8 ஆம் தேதியை, எதிர்க் கட்சிகள் கருப்பு நாளாகக் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளன. மேலும் எனது உருவ பொம்மையை அன்று எரிக்கவும் முடிவு செய்துள்ளன.
நான் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் சீடர் என்பதையும், ஒருபோதும் நான் பதற்றமடைய மாட்டேன், ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து நடத்துவேன் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை.
சிலர் கொள்ளையடித்து வைத்திருக்கும் பணத்தை நாம் சட்ட நடவடிக்கைகள் மூலம் மீட்டு வருகிறோம். அதனால் அவர்கள் என்னை அமைதியாக இருக்க விடுவதில்லை…” என்று பேசினார் மோடி.
மேலும், காங்கிரஸ் கட்சி கரையான் என்றும், அவற்றை அடியோடு அப்புறப் படுத்த வேண்டும் என்றும் கூறினார் மோடி. “நான் இங்கே பாஜக.,வை வெற்றி பெறவைக்க வேண்டும் என்று கோரி உங்களிடம் வரவில்லை, நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்து, ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் காங்கிரஸை மூட்டைகட்டி இந்த மாநிலத்தில் இருந்து வெளியேறுங்கள்” என்று பேசினார்

Leave a Response