மழைக்காலங்களில் சேதம் அடையும் சாலைகள்! என்னென்ன செய்யலாம்…..?

201705300211125744_Eastern-and-Western-Express-Roads-will-be-revamped-before_SECVPF

பருவ மழைக்காலங்களில் சேதம் அடையும் சாலைகளை, உடனுக்குடன் சீரமைக்கும் தொழில்நுட்பங்களை, தமிழக நெடுஞ்சாலைத்துறை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு, தென்மேற்கு மற்றும் வட கிழக்கு பருவ மழைகளால், நீராதாரம் கிடைக்கிறது. பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தால், சாலைகள், தரை பாலங்கள், கல்வெட்டுகள் உள்ளிட்டவை சேதம் அடைகின்றன.

உயிரிழப்பு:

இதனால், போக்குவரத்து முடங்குவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கிறது. சில நேரங்களில் விபத்து, உயிரிழப்பு போன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இது போன்று,l
மழையில் சேதமடையும் சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க, கட்டட இடிபாடுகளை நெடுஞ்சாலைத்துறையினர் பயன்படுத்துகின்றனர். வாகனங்களின் நடமாட்டம் அதிகரிக்கும் சாலைகளில், இது கைகொடுப்பதில்லை. இதையடுத்து, தார் மற்றும் கெமிக்கல் பயன்படுத்தி, சாலையில் ஒட்டு போடுகின்றனர். இதுவும், பெரிய அளவில் கைகொடுப்பது இல்லை. சாலை அமைத்த சில நாட்களிலேயே தார் பெயர்ந்து, மீண்டும் பள்ளம் உருவாகி விடுகிறது. எனவே, வரும் காலங்களில், இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், வெளிநாடுகளில் உள்ளது போல், நவீன தொழில்நுட்பங்களை, தமிழக நெடுஞ்சாலைத்துறை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.

Tamil_News_large_1882323_318_219

இது குறித்து, ஓய்வு பெற்ற மாநில நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஒருவர் கூறியதாவது:
சாலை அமைப்பு பணிகளுக்காக, பல்வேறு நவீன ரக வாகனங்கள், கருவிகள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. ரஷ்யா, உக்ரைன், ஜெர்மனி போன்ற நாடுகளில், இது போன்ற தொழில்நுட்பங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை, பழைய சாலையை தோண்டி தானாகவே அள்ளும் இயந்திரம், புதிய சாலை அமைக்கும் இயந்திரங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி, சேதம்அடைந்துள்ள சாலையை புதுப்பிக்கும் தொழில்நுட்பம் இன்னும் அறிமுகமாகவில்லை. வெளிநாடுகளில், இதற்கான பிரத்யேக இயந்திரம் உள்ளது.

பாதிப்புகள் குறையும்:

இது மட்டுமின்றி, சேதமடைந்த சாலையில் கெமிக்கல் ஊற்றி, அதன்மேல், ‘மேட்’ போன்று ரெடிமேட் சாலைகள் ஒட்டப்படுகின்றன. அதிக மழை பெய்தாலும், அவை பாதிப்படைவது இல்லை. மழைக்கு பின், அவை அகற்றப்பட்டு, புதிய சாலை போடப்படுகிறது. இது போன்ற தொழில்நுட்பங்களை தமிழகத்திலும் செயல்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால், பருவமழைக்கான பாதிப்புகள் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response