இரண்டாவது ஒருநாள் போட்டி: இந்திய அணி போராடி வெற்றி!

17abaa25-17e5-48f7-8b0c-336717a485ce

புனேயில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்தின் 230 ரன்களை விரட்டிய இந்திய அணி 46வது ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்று சமன் செய்தது.

அடித்து ஆட கடினமான பிட்சில், நியூஸிலாந்தின் கிடுக்கிப் பிடி பந்து வீச்சு, நல்ல களவியூகம் ஆகியவற்றுக்கு எதிராக இந்திய அணி இறுதியில் தினேஷ் கார்த்திக் உறுதியினால் சவுகரியமாக வெற்றி பெற்றது போல் தோன்றினாலும் உண்மையில் இந்திய அணியை வெற்றிக்காக நியூஸிலாந்து போராட வைத்தது என்றே கூற வேண்டும்.

de2205ac-4951-49b9-8e1f-cbac4b79fcac

இப்படிக் கூற காரணமுள்ளது, இந்திய பிட்ச்களில், ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிராக நன்றாக ஆடும் இந்திய அணிக்கு எதிராக, நியூஸிலாந்தின் இடது கை ஸ்பின்னர் சாண்ட்னர் வீசியது மிகுந்த கவனத்துக்குரியதே. சாண்ட்னர் தனது வேகம், லெந்த், பிளைட் என்று மாற்றிக் கொண்டேயிருந்தார், இதனால் அவரை அடித்து ஆடுவதற்கு இந்திய வீரர்கள் சிரமப்பட்டனர், அருமையாக ஆடிய தினேஷ் கார்த்திக்கே இருமுறை அவர் பந்தில் பீட் ஆனார். நல்ல பீட்டன், பந்து மிடில் ஸ்டம்பில் பிட்ச் ஆகி மட்டையின் விளிம்பைக் கடந்து சென்றது. 10 ஓவர்களில் 38 ரன்களை மட்டுமே கொடுத்து அவர் பாண்டியாவின் விக்கெட்டை கைப்பற்றினார். 10 ஓவர்களில் ஒரேயொரு சிக்சரை மட்டுமே விட்டுக் கொடுத்தார் சாண்ட்னர். ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை. சிறிய இந்திய மைதானங்களில் அயல்நாட்டு ஸ்பின்னர் ஒருவர் 40 ரன்களுக்கும் குறைவாக விட்டுக் கொடுத்து இந்திய அணியைப் போராட வைத்தது நிறைய பாராட்டுதலுக்குரியது.

ஆனால் வர்ணனையில் ஒரு வர்ணனையாளர் மட்டுமே சாண்ட்னரை பாராட்டினார். மற்றபடி இந்திய வீரர்களை புகழ்வதற்கே நேரம் சரியாக இருந்தது, அதே போல் வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்ன, 140-145 கிமீ வேகத்தில் கூடுதல் பவுன்ஸுடன் வீசி இந்திய பேட்ஸ்மென்களின் சவுகரிய நிலையைக் கேள்விக்குட்படுத்தினார், இவரும் 8 ஓவர்களில் 1 மெய்டனுடன் 21 ரன்களுக்கு ஷிகர் தவன் விக்கெட்டைக் கைப்பற்றினார். ஷிகர் தவண் இவரது வேகமறியாமல் மேலேறி வந்து ஆடப்போய் பந்து வேகமாக வர திணறி கேட்ச் கொடுத்து வெளியேறினார். டிம் சௌதி 9 ஓவர்களில் 60 ரன்களையும் டிரெண்ட் போல்ட் 10 ஓவர்களில் 54 ரன்களையும் கொடுத்தனர்.

8104e019-9f80-4a68-9897-6d223ead1262

காரணம் இவர்கள் இருவரும் குறைந்த இலக்கு என்பதால் இந்திய பேட்ஸ்மென்களை வீழ்த்துவதற்காக சில பல ஷாட் பிட்ச் பந்துகளை வீசினர், இதனால் ரன்களை வழங்க நேரிட்டது.

இந்திய அணியில் முதலில் ரோஹித் சர்மா 19 பந்துகளில் 7 ரன்கள் எடுத்த நிலையில் சௌதி பந்தில் பேலன்ஸ் தவறி ஷார்ட் மிட்விக்கெட்டில் மன்ரோவுக்கு கேட்சிங் பயிற்சி அளித்து வெளியேறினார்.

விராட் கோலி, ஷிகர் தவண் இணைந்து அதன் பிறகு ஸ்கோரை கொஞ்சம் வேகமாகவே உயர்த்தினர். தவண் ஏற்கெனவே ஒரு அப்பர் கட் பவுண்டரியையும் ஸ்கொயர் லெக்கில் ஒரு பவுண்டரியையும் அடித்திருந்தார். மேலும் சவுதியை மிக அருமையாக பாயிண்ட் கவர் இடைவெளியில் ஒரு பவுண்டரியையும் அடித்தார் தவண். கோலி இறங்கி சௌதி பந்தை ஸ்கொயர் லெக் பிளிக் பவுண்டரி அடித்து தொடங்கினார்.

 

7-வது ஓவரில் சௌதி, விராட் கோலிக்கு ஷார்ட் பிட்ச் பந்து முயற்சியை மேற்கொள்ள முதலில் ஸ்கொயர் லெக்கில் ஒரு புல்ஷாட் பவுண்டரி அடித்தார், அதே ஓவரில் மீண்டும் தவணுக்கு ஒரு ஷார்ட் பிட்ச் வீச தவன் அதனை முறையாக ஸ்கொயர்லெக்கில் சிக்சருக்குத் தூக்கினார். இதே ஓவரில் மீண்டும் ஒரு ஷார்ட் பிட்ச் பந்து தவணின் மூக்கு உயரத்துக்கு வர திணறினார், எட்ஜ் என்று மிகப்பெரிய முறையீடு எழுந்தது ரிவியூவில் இல்லை என்று முடிவானது. ஷார்ட் பிட்ச் பந்துகள் உயரம் குறைவாக வரும்போது விளாசும் தவண், மூக்குயரம் வந்த போது திணறியது தெரிந்தது.

சிறிய மைதானம் என்பதால் கோலி, போல்ட்டின் ஷார்ட் பிட்ச் பந்தில் பிழைத்தார். ரவுண்ட் த விக்கெட்டில் வந்து கோலியின் இடது தோள்பட்டைக்கு சற்றே கூடுதல் உயரத்தில் பவுன்சர் வீச கோலி புல்ஷாட்டை சரியாக ஆடவில்லை, ஆனாலும் சிறிய பவுண்டரி என்பதால் பந்து சிக்சருக்குப் பறந்தது. மீண்டும் மில்ன பந்தை கவர் ட்ரைவ் ஆட நினைத்தார் கோலி, பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு மிட் ஆன் பீல்டரைக் கடந்து பவுண்டரி ஆனது, கொஞ்சம் டைமிங்கில் கோலி திண்டாடினார்.

10 ஓவர்களில் 64 ரன்களை இந்தியா எடுக்க அதில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என்று விரைவுத் தொடக்கம் கண்டது. சாண்ட்னர் வீச வந்த போது மீண்டும் கோலி தொடையில் வாங்க எல்.பி.முறையீடு எழுந்தது. இப்படியேப் போய்க்கொண்டிருந்த ஆட்டத்தில் கொலின் டி கிராண்ட்ஹோம் பந்து வீச வந்தார், 5வது பந்தில் பந்தின் தையலை குறுக்காக வைத்து வீசினார் கிராண்ட் ஹோம் இதனால் கொஞ்சம் கூடுதல் பவுன்ஸ் கிடைத்தது, உடலை விட்டு விலகி மட்டையைக் கொண்டு சென்று டிரைவ் ஆட முயன்ற விராட் கோலி எட்ஜ் செய்ய விக்கெட் கீப்பர் லேதம் மிக அருமையாகப் பிடித்தார். இந்தியா 13.5 ஒவர்களில் 79/2.983da9e5-2269-42cf-be15-e9ae700c9942

கார்த்திக், தவண் அரைசதங்கள்:

கோலி அவுட் ஆகி இறங்கிய கார்த்திக் அதே ஓவரில் பேக்வர்ட் பாயிண்ட், தேர்ட்மேன் இடையே பவுண்டரியுடன் எண்ணிக்கையைத் தொடங்கினார். கடைசியில் மிக அருமையான கவர் டிரைவில் போட்டியை வெற்றி பெறச் செய்தார், இடையில் கொஞ்சம் போராடவே செய்தார் கார்த்திக். சரளமாக ஆடியதாகக் கூற முடியாது.

தவணும் இவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்காக 66 ரன்களைச் சேர்த்தனர். கார்த்திக்கும் பாண்டியாவும் இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 59 ரன்களையும் தோனியுடன் இணைந்து 5வது விக்கெட்டுக்காக 28 ரன்களையும் சேர்த்தார் தினேஷ் கார்த்திக்.

ஷிகர் தவண் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 84 பந்துகளில் 68 ரன்களை எடுத்து மில்ன பந்தில் அவுட் ஆனார். ஹர்திக் பாண்டியா 31 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 30 ரன்கள் எடுத்து சாண்ட்னர் வீசிய புல்டாஸை முன் கூட்டியே ஸ்வீப் ஆடும் முயற்சியில் ஷார்ட் பைன் லெக்கில் கேட்ச் கொடுத்தார். தோனி பலத்த கரகோஷத்துக்கிடையே இறங்கி 3 பவுண்டரிகளுடன் 21 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார், இந்த 3 பவுண்டரிகளில் ஒரு பிளிக் பிரமாதம் இன்னொன்று கவர் திசையில் அடித்த பஞ்ச் மிகப்பிரமாதம். தினேஷ் கார்த்திக் 92 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆட்டநாயகனாக புவனேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Response