பொறையார் கோரவிபத்து: நிவாரணம் அறிவித்தது தமிழக அரசு.

201710071010085161_Salem-CM-Edappadi-palanisamy-consult-party-administrators_SECVPF

நாகை அருகே பொறையாரில் போக்குவரத்து கட்டட மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் பலியானதையடுத்து பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே தமிழகத்தில் பழைய கட்டடங்களில் இயங்கும் பணிமனைகள் மாற்றப்படும் என்றும் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் என்றும்  ஆர். விஜய பாஸ்கர் தெரிவித்தார். ஊழியர்கள் பலியானது குறித்து முதலமைச்சரிடம் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் அளிக்க இருப்பதாகவும் அதன்பிறகே விபத்தில் இறந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

தற்போது அரசுத்தரப்பில் கட்டட மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா  7.5 லட்சம் ரூபாயும்; படுகாயமடைந்தவர்களுக்கு தலா 1.5லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாகவும், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இறங்களை தெரிவித்துக்கொள்வதாகவும்  முதலமைச்சர் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response