சுனாமியை முன்கூட்டியே சொல்லும் செயற்கைக்கோள்! இந்தியாவிலிருந்து நாளை விண்ணில் பாய்கிறது!

pslv 2
நாளை விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி., சி39 ராக்கெட்டுக்கான 29 மணிநேர கவுண்டவுன் இன்று ஆரம்பம்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி., சி39 ராக்கெட் நாளை மாலை விண்ணில் பாயவுள்ளது. இதற்கான கவுண்டவுன் இன்று மாலை 1:59 நிமிடங்களுக்கு ஆரம்பமாக உள்ளது. 29 மணி நேர கவுண்டவுன் நாளை மாலை 6.59 மணிக்கு முடிவடைந்தவுடன் ராக்கெட் விண்ணில் பாயவுள்ளது.

தற்போது இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 320 டன் எடையும் 44.4 மீ., உயரமும் கொண்ட இந்த ராக்கெட்டில், இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1-எச் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இதன் மூலம் சுனாமி போன்ற இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும்.

Leave a Response