சுதந்திர தினக் கொண்டாட்டம்… மத்திய அரசுக்கு மேற்குவங்கம் எதிர்ப்பு!

west-bengal-chief-minister-mamata-banerjee-hoists-national-flag-during-70th-independence-day_147125481630

இந்தியாவின் 71வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.

அதில், ஆகஸ்டு 9ம் தேதி முதல் 30ம் தேதி வரை, அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ‘சங்கல்ப்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, மத்திய அரசு சொல்கிறபடி சுதந்திரதினத்தை கொண்டாட முடியாது என்று அறிவித்துள்ளது மேற்குவங்க அரசு. இது குறித்து அம்மாநில கல்வி அமைச்சர்,
”தேச பக்தி என்பது திணித்து யாருக்கு வருவதில்லை. அது இயல்பிலேயே இந்தியர்களுக்கு உள்ளது. மேற்கு வங்கத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் கொடியேற்றி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி சுதந்திர தின விழா ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.
பள்ளிகள் மட்டும் இன்றி அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி கொண்டாடுவோமே தவிர, மத்திய அரசு சொல்வதை கடைப்பிடிக்க அவசியமில்லை’’ என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.

இது தவிர, ”மத்திய அரசின் சுற்றறிக்கை என்பது வெறும் பரிந்துரைதானே தவிர, கட்டாயம் இல்லை. சுற்றறிக்கையின் நோக்கம், தேசபக்தி உணர்வை உருவாக்கவேண்டும் என்பதுதான். இது அரசியல் கட்சியின் செயல் திட்டம் அல்ல. மதச்சார்பற்ற செயல் திட்டம்’’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது!

Leave a Response