கர்ப்பிணிப் பெண்கள் என்னவெல்லாம் சாப்பிட வேண்டும்? எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்? இதோ ஒரு சிம்பிள் கைடு…

karpini1

கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட வேண்டியவை!

1. தினமும் அரை லிட்டர் அளவு பால் குடிப்பது கருவில் உள்ள குழந்தையின் எலும்புகளுக்கு கால்ஷிய சத்தை சேர்த்து அவற்றை உறுதிப்படுத்தும்.
2. தாய் நிறையப் பழங்கள் சாப்பிட வேண்டும். இது மலச்சிக்கலைத் தவிர்க்கும்.
3. கருவுற்ற முதல் சில மாதங்களுக்கு வாந்தி, மயக்கம் இருக்கலாம். சிலருக்கு அதிகமாக இருக்கும். அச்சமயம் பழ ஜூஸ், வேகவைத்த காய்கறிகள், கஞ்சி வகைகளை அடிக்கடி சாப்பிடலாம்.
4. எள் உருண்டை, கடலை உருண்டை, பொட்டுக் கடலை உருண்டை போன்றவற்றில் உள்ள வெல்லம் இரும்புச் சத்தை தரும். கடலை, எள்ளு ஆகியவற்றில் உடலுக்கு மிகவும் தேவையான கொழுப்பு அமிலங்கள் (Essential Fatty Acids) உள்ளன. எள், கருச்சிதைவை ஏற்படுத்தாது.
5. புழுங்கலரிசி உபயோகிப்பது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது.

pregnant-women-maternity-care-390x285

கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாதவை!

1. சூடான உணவு எதுவும் சாப்பிட கூடாது. அதிக காரம், மசாலா பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.
2. பைனாப்பிள்,கொய்யா,பப்பாளி இது ரொம்ப சூடு இதை தவிர்க்கவும். 7 மாதத்திற்கு மேல் சிறிது சாப்பிடலாம்.
3. இறால், பீஃப் ,கருவாடு ரொம்ப சூடு, கொஞ்சமா சாப்பிட்டு கொள்ளலாம்,
4. இரவு சாப்பாட்டை 7 மணிக்குள் முடிக்கவும்.
5. காய் வகைகளில் உருளை, சேனை,சீனி வள்ளி,மரவள்ளி இதெல்லாம் அளவாக சாப்பிடவும்.

கர்ப்பிணிப் பெண்கள் வாந்தி எடுக்காமல் இருக்க…

குமட்டல் தோன்றும் பொருட்களைத் தவிர்த்து விடுங்கள். என்ன பிடிக்கிறதோ அதில் சத்தான சாப்பாடாக சாப்பிடுங்கள்.
கீரை, மீன் போன்றவை மிகவும் நல்லது.
வாந்தி வரும்போல இருந்தால் ஒரு எலுமிச்சை பழத்தை நன்றாக கசக்கி முகருங்கள். சாப்பிட்டவுடன் மெதுவாக நடங்கள்.
ஜூஸ் மட்டும் குடிக்க பிடித்தால் காய்கறி ஜூஸ் குடியுங்கள்.
உடல் சூட்டை அதிகரிக்கும் உணவு பொருட்களைத் தவிருங்கள்.
பைனாப்பிள், மாம்பழம், பப்பாளி போன்றவை கொஞ்ச நாட்களுக்கு வேண்டாம்.

கர்ப்பிணிகளின் மலக்கட்டு தீர…

1. நன்கு பழுக்காத செவ்வாழையை சிறிதாக அரிந்து, அதில் நான்கு சிட்டிகை மஞ்சள், 200 மி.லி சூடான பால் சேர்க்கவும் படுக்கைக்கு செல்லும்முன் இதனைச் சாப்பிட மலம், தாராளமாய் இறங்கும்.
2. ரோஜாப்பூவுடன், அரை கிராம் அளவில் மஞ்சள், முன்று பேரீச்சம்பழம் சேர்து கொதிக்க வைத்துச் சாப்பிட மலச்சிக்கல் நீங்கும்.
3. பிரண்டையுடன், மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து துவையலாகச் செய்து சாப்பிட மலக்கட்டு நீங்கும்.
4. பொடுதலைக் கீரையுடன், மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், மஞ்சள் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்.
5. கடுக்காயுடன் சிறிது மஞ்சள் சேர்த்து, வெந்நீரில் சாப்பிட மலச்சிக்கல் நீங்கும்.
கர்ப்பிணிப் பெண்கள் வாந்தி எடுக்காமல் இருக்க
குமட்டல் தோன்றும் பொருட்களைத் தவிர்த்து விடுங்கள். என்ன பிடிக்கிறதோ அதில் சத்தான சாப்பாடாக சாப்பிடுங்கள்.
கீரை, மீன் போன்றவை மிகவும் நல்லது.
வாந்தி வரும்போல இருந்தால் ஒரு எலுமிச்சை பழத்தை நன்றாக கசக்கி முகருங்கள். சாப்பிட்டவுடன் மெதுவாக நடங்கள்.
ஜூஸ் மட்டும் குடிக்க பிடித்தால் காய்கறி ஜூஸ் குடியுங்கள்.
உடல் சூட்டை அதிகரிக்கும் உணவு பொருட்களைத் தவிருங்கள்.
பைனாப்பிள், மாம்பழம், பப்பாளி போன்றவை கொஞ்ச நாட்களுக்கு வேண்டாம்.

-சித்த மருத்துவர் AadhavanSiddhashram அருண்சின்னையா

Leave a Response