நீங்கள் லே அவுட் ஆர்டிஸ்டா? தூர்தர்சன் தரப்போகுது 1 லட்சம்!

dd

தூர்தர்ஷன் லோகோவை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. பழைய லோகோவுக்கு பதிலாக, புதிய சின்னத்தை வடிவமைக்கும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

தூர்தர்ஷனின் மேல் இருக்கும் பழையகால நினைவுகளைப் பாதுகாக்கும் வகையிலும், இக்கால இளைஞர்களுடன் டிடிக்கான இணைப்பை ஏற்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 23 சேனல்களை ஒளிபரப்பி வரும் தூர்தர்ஷன், இதற்காக புதிய சின்ன வடிவமைப்புப் போட்டியை அறிவித்துள்ளது. இதில் வெற்றி பெறுவர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

இதுகுறித்துப் பேசிய பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி சசி எஸ் வேம்பட்டி, ”நாட்டில் பெரும்பான்மையான மக்கள் தொகையினர் 30 வயதுக்குட்பட்டவராகவே இருக்கின்றனர். குறிப்பாக இந்திய மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்கும் குறைவானவர்கள்.

முந்தைய காலகட்டங்களில் தூர்தர்ஷனோடு இணைப்பு கொண்டிருந்த தலைமுறை போல, இன்றைய தலைமுறையினர் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதில்லை. அவர்களோடு தூர்தர்ஷனை இணைக்கும் முயற்சியாக இந்த நிகழ்வை முன்னெடுத்திருக்கிறோம்” என்றார்.

புதிய சின்னம் டிடி தொலைக்காட்சியோடு மக்களுக்கு உள்ள பசுமையான நினைவுகளையும், ஏக்கத்தையும் நினைவுகூரும் முறையில் இருக்க வேண்டும். புதிய இந்தியாவின் லட்சியங்களை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.

புதிய சின்னங்களைச் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 13-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

Leave a Response