அப்துல்கலாமை நினைவுப்படுத்திய இசையமைப்பாளர் மற்றும் நடிகர்!!

2in1
சென்னை: தாம்பரம் தனியார் கல்லூரியில் நடைபெற்று நிகச்சியில் சிறப்பு விருந்தினராக
இசைஞானி இளையராஜா மற்றும் விஜய்சேதுபதி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றின.அதில் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் நலத்திட்டதை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா,”இளைஞர்கள் கனவு காண வேண்டாம். நான் இசையமைப்பாளராக வேண்டும். என நான் எண்ணியதய் போல பல முயற்சிகள் செய்து இசையமைப்பாளர் ஆனேன். அதே போல் நீங்கள் வைத்துள்ள திட்டத்தை முழு மூச்சுடன் செயல்படுத்த வேண்டும். அப்போது தான் உங்கள் லட்சியத்தை அடைய முடியும்.” என கூறினார்.

விஜய் சேதுபதி பேசுகையில், “மாணவர்கள் படிக்கும் போது அதில் முழுகவனம் செலுத்தி படித்து முடித்து விடுங்கள். அப்போது தான் சமுதாயத்தில் உள்ள சில மிருகங்களை எப்படி எதிர்கொள்வது என்ற, சமூக பாடத்தில் வெற்றி பெற முடியும். வாழ்க்கை தான் சிறந்த பாடங்களை கற்றுத்தரும்.”என தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என சொன்னது போல, கனவு மட்டும் கண்டால் போதாது தொடர்ந்து அதற்கு முயற்சியை செய்ய வேண்டும் என்று இளையராஜா கூறி அப்துல்கலாம் அவர்களை நமக்கு நினைவுப்படுத்தினர்.

Leave a Response