கருப்பை புற்றுநோய் கண்டறியும் புதிய சாதனம்!

saathanam
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்காவில் உள்ள பேராசிரியர் நிம்மி ராமானுஜம் தனது ஆய்வுக்குழுவுடன் சேர்ந்து கருப்பை புற்று நோயை கண்டறியும் சிறிய சாதனத்தை உருவாக்கியுள்ளார். இந்த சாதனத்தின் மூலம் வலி ஏதும் இல்லாமல் புற்று நோயை ஆய்வு செய்ய முடியும். பாக்கெட் சொல்போஸ்கோப் எனப்படும் இந்த சாதனத்தை லேப்டாப் அல்லது செல் போனில் இணைத்து பெண்கள் தானாகவே தங்களை ஆய்வு செய்யலாம்.

நிம்மி ராமானுஜம் , ‘சாதனத்தின் ஒரு முனையில் காமிரா மற்றும் லைட் உள்ளது. மேலும் இதில் உள்ள இன்செர்ட்டர் மூலம் நோய்க்கான முழு ஆய்வையும் ஸ்பெக்குலம் பயன்படுத்தாமலும் வலி இல்லாமலும் செய்து கொள்ளலாம். கருப்பை புற்று நோயை கண்டறிவதற்கான கருவிகளும் குணப்படுத்துவதற்கான வழிகளும் ஏற்கனவே உள்ளன. இருப்பினும் பல பெண்கள் மருத்துவமனைக்கு சென்று நோயை பரிசோதனை செய்ய தயங்குகின்றனர். அதனால் இது போன்று வீட்டிலேயே பரிசோதித்து கொள்ளும் படியான சாதனம் பெண்களுக்கு உதவியாக இருக்கும். இந்த ஆய்வுக்கு அமெரிக்காவின் ஆரோக்கியத்திற்கான தேசிய நிறுவனம் உதவி செய்தது. இது போன்ற நல்ல தொழில்நுட்பத்தின் மூலம் கருப்பை புற்று நோயால் இறப்பவர் எண்ணிக்கை 50 சதவீதம் குறையும்’ என அவர் கூறினார்.

நிம்மி ராமானுஜனின் குழு தாங்கள் உருவாக்கிய சாதனத்தை 15 பேரிடம் சோதனை செய்தனர். சோதனையின் முடிவில், ‘இயந்திரத்தின் மூலம் 80 சதவீதம் சரியாக நோயை கண்டறிய முடியும்’ என கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த இயந்திரத்தின் கட்டுப்பாட்டு அனுமதிக்காக காத்திருக்கிறோம், இந்த ஆண்டு இறுதிக்குள் அனுமதி கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சாதனம் பயன்படுத்தி மருத்துவர்களிடம் கூறினால் ஏற்றுகொள்வார்களா அல்லது மீண்டும் பரிசோதிக்க வேண்டும் என்று கூறுவார்களா.

Leave a Response