கேன்சர் நோயாளிகளுக்காக மொட்டை போட்டு கூந்தல் தானம் செய்த இளம் பெண் இயக்குனர்….

சென்னை அடையாரில் உள்ளது அரசு கேன்சர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம். இங்கு, பல வகையான கேன்சர் நோய்களினால் பாதிக்கப்பட்ட பல தரப்பட்ட வயதினர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு அனுமதிக்கப்பட்ட சில பெண் நோயாளிகளுக்கு தலை முடி முழுவதுமாக கொட்டப்பட்டுள்ள நிலையில் உள்ளனர். தங்களுக்கு கேன்சர் நோய் பிரச்சனை ஒரு புறம் இருய்ந்தாலும், தங்கள் முடி முழுவதுமாக கொட்டப்பட்டுள்ளது என்ற ஒரு மன வருத்தம் உண்டு.

இவர்களின் மன வருத்தத்தை போக்க செயற்கை முறையில் தலைமுடியை விக்(டோப்பா) மட்டுமே பொறுத்த முடியும். அந்த விக் செய்வதற்கு அதிக அளவில் பெண்களின் கூந்தல் தேவைப்படுகிறது. இதன் காரணமாக சில பெண்கள் தங்களுடைய கூந்தலை கேன்சர் நோயாளிகளுக்காக பல இடங்களில் தானம் செய்கிறார்கள்.
சமீபத்தில் வெளிவந்த “ராஜா மந்திரி” என்ற திரைப்படத்தின் இயக்குனர் செல்வி.உஷா கிருஷ்ணன், தன்னுடைய தலை மொட்டை போட்டு அந்த கூந்தலை சென்னை அடையாரில் உள்ள அரசு கேன்சர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் சென்று தானம் செய்துள்ளார்.

இது சம்பந்தமாக உஷா கிருஷ்ணன் நம்மிடம் தெரிவித்ததாவது, “நிறைய தடைவை யோசிச்சிருக்கேன். கேன்சர் பேஷண்ட்ஸ்க்கு ஹேர் டொனேட் பண்ண மினிமம் 15 இன்ச் கூந்தல் இருக்கனும். வளரட்டும்.. யோசிப்போம்னு விட்டுட்டேன். வளர்ந்துடுச்சு.. பாய்கட் பண்ணலாம்னு நெனச்சா இருந்ததே 15 இன்ச் தான். என்னை மொட்டைல பாக்க எனக்கே தைரியம் இல்ல… அதனால வேணாம்னு தள்ளிப்போட்டேன். ஆனா திரும்ப திரும்ப தோனிட்டே இருந்துச்சு.. இப்ப இல்லன்னா இனி எப்பதான்னு முடிவெடுத்து, மறு யோசனைக்கு போகாம, யாரு என்ன ரியாக்‌ஷன் கொடுப்பாங்கனு யோசிக்காம, டோனார் ரூல்ஸ ஒழுங்கா படிச்சிட்டு “கிரீன் ட்ரெண்ட்ஸ்’ல போய் உக்காந்துட்டேன்.

கூந்தல் தானம் செய்ய ரூல்ஸ் கீழ் வருமாறு:
1. குறைஞ்சது 15 இன்ச் இருக்கனும்.
2. பொடுகு, தலையில் வேறு பிரச்சனைகள் இருக்கக்கூடாது.
3. பெர்மனண்ட் கலரிங், டையிங், கர்லிங் ஆகியவை செய்திருக்க கூடாது.
4. போனி டெயில் போட்டு, முனைகள் சமமாக வெட்டப்பட்டு, பகுதி பகுதியாகப் பிரித்து, இறுக்கமாக கட்டவேண்டும். வெட்டி தரையில் விழுந்ததோ, முறையாக அடுக்கப்படாததையோ வைத்து விக் செய்யமுடியாது.

அவ்ளோ தான் மூன்று பகுதியா பிரித்து, கட்டியிருந்த முடியை ஒரு பாலீத்தின் பையில் வைத்து சீல் செய்து, அடையார் கேன்சர் இன்ஸ்டியூட்டின், ஆந்திரா பேங்க் பில்டிங்கின், மூன்றாவது தளத்தில் உள்ள ஹேர் டோனார் பிரிவில் கொடுத்துட்டேன். அம்மாதான் கொஞ்சம் கோபப்பட்டாங்க.. முடி தான.. வளர்ந்துடும் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டேன்.” என்கிறார் இளம் பெண் இயக்குனர் உஷா கிருஷ்ணன்.1

2

3

4

Leave a Response