இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது தமிழகத்தில் ஆங்காங்கு சலசலப்பு…

maadu
நம்ம ஊரில் கொஞ்ச நாள் முன்னாடி ஜல்லிக்கட்டு பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அதேப்போல மாட்டிற்கு பிரச்சனை ஒன்று அரங்கேறியுள்ளது.

அதாவது இந்நிலையில் இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என்று மத்திய அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அதற்கு நாடு முழுவதும் பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. கேரளாவில் மாட்டுக் கறி திருவிழா நடத்தி, மத்தியில் ஆளும் பாஜக அரசிற்கு எதிர்ப்பு காட்டி வருகின்றனர்.

இதற்கிடையில் கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் மாட்டிறைச்சி தடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தனி மனித உரிமைக்கு எதிரானது என்றும், பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகள் நடைபெற்று வருவதாகவும் குற்றம்சாட்டினர். மாட்டிறைச்சியை அனைத்து சமூகத்தினரும் உணவாகப் பயன்படுத்தி வருவதாக சுட்டிக் காட்டினர். மேலும் இதனை தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். கோவை ரயில் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட முயன்ற அவர்களை தடுத்து நிறுத்தி, போலீசார் கைது செய்தனர். கேரளாவில் பெரிய அளவில் தொடங்கிய மாட்டிறைச்சிக்கான போராட்டம், தமிழகத்திற்கு நுழைந்துள்ளது.

மேலும் சென்னையில் ஐஐடி மாணவர்கள் மாட்டிறைச்சி திருவிழா நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response