வருகின்ற ஜூன் 5ஆம் தேதி விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி மார்க்-3…

mark3
இஸ்ரோ நிறுவனத்தின் ராக்கெட் ஜிஎஸ்எல்வி மார்க்-3 வருகின்ற ஜூன் 5 வானில் ஏவ இருக்கிறது. அத பத்தி தெரிஞ்சிக்க வாங்க முழுசா படிங்க.

அதாவது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட, அதிக எடை தாங்கும் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்டை இஸ்ரோ நிறுவனம் வரும் ஜூன் 5ஆம் தேதி மாலை 5 மணிக்கு விண்ணில் ஏவுகிறது. இதற்கான கவுண்ட் டவுண் ஜூன் 4ஆம் தேதி தொடங்குகிறது.

பூமியின் சுற்றுவட்ட பாதையில் செய்ற்கைக்கோளை நிலைநிறுத்த பயன்படும் இந்த ராக்கெட்டின் தயாரிப்புப் பணிகள் 2000ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 2009-10ஆம் ஆண்டிலேயே விண்ணில் ஏவப்பட இருந்த இந்த ராக்கெட் பல்வேறு காரணங்களால் தடைபட்டது.

இந்நிலையில், வரும் ஜூன் 5ஆம் தேதி ஜிசாட்-19 செயற்கைக்கோளை தாங்கியபடி ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் விண்ணில் பாய இருக்கிறது.

Leave a Response