தொழிலாளர் சேமநல நிதி எனப்படும் பி.எப். பிடித்தம் 12 சதவீதமாகவே நீடிக்கும்…

epfo
பி.எப்.,க்கு தொழிலாளர் சம்பளத்தில் இருந்து மாதம் தோறும், 12 சதவீதமும், நிறுவனம் சார்பில் இருந்து, 8.33 சதவீதமும் பிடித்தம் செய்யப்படுகிறது. மாத சம்பளம், 15 ஆயிரம் ரூபாய் இருப்பவர்களுக்கு பி.எப்., கட்டாயம். இந்த வரம்பை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற ஆலோசனை பரிசீலனையில் உள்ளது. தொழிலாளர் சேம நலநிதி அமைப்பில், 4.2 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 8 லட்சம் நிறுவனங்கள் இதில் பதிவு செய்துள்ளன. இந்த அமைப்பு, 11.50 லட்சம் கோடி ரூபாயை நிர்வகித்து வருகிறது.

அனைவரும் எதிர்ப்பு:-

தொழிலாளரிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகையை, 12 சதவீதத்தில் இருந்து, 10 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை சமீபத்தில் எழுந்தது. இது குறித்து, மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் நடந்த தொழிலாளர் சேம நலநிதியின் வாரிய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிடித்தம் செய்யப்படும் தொகையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, தொழிற்சங்க பிரதிநிதிகள் மட்டுமல்ல, நிறுவனங்களின் பிரதிநிதிகளும் ஏற்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Leave a Response