உங்களுக்கு அக்கிப்புண்கள் இருக்கிறதா இதோ உங்களுக்கான டிப்ஸ்…

akki
கோடையின் போது அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தும் அக்கிப்புண்ணை எப்படி சரி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

வெயில் காலத்தில் முதுகுப் பகுதியில் வேர்க்குரு போன்று நீர் வடியும் கொப்புளங்கள் வருவதை தான் அக்கி என்று சொல்கிறோம். அக்கி வரும் போது உடலில் அரிப்பு, எரிச்சல் மற்றும் நீர் வடிதல் போன்ற துன்பங்கள் ஏற்படும். ஆனால் இதனை எளிதாக வீட்டு மருந்து மூலம் சரிசெய்யலாம். இந்த மருந்து போட்ட இரண்டு நாட்களில் அக்கி சரியாகிவிடும்.

பசலைக் கீரை இலைகளை நன்றாக அரைத்துப் பிழிந்து எடுத்த சாறு மற்றும் வெண்ணெய் ஆகிய இரண்டு பொருட்களையும் ஒன்றாகக் கலந்து பசை போல செய்து கொள்ள வேண்டும். அவற்றை தினமும் இரவு அக்கிப் புண்கள் மீது பூசி காலையில் மிதமான வெந்நீரில் குளித்து வந்தால் 3 நாட்களில் அக்கி பரிபூரணமாக சரியாகும்.

Leave a Response