வடபழனி தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதல்வர் நிதியுதவி….

palani
இன்று சென்னையில் மிகவும் பரபரப்பாக பேசிய செய்திகளில் மிகக் கவலை தரும் செய்தி என்றால். வடபழனி தீ விபத்து. தற்பொழுது அத்தீவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் ருபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் தீ பற்றியது. அந்த தீ அங்கிருந்த வீடுகளுக்கும் பரவியது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதிகப்படியான புகைமூட்டம் காரணமாக அங்கிருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து காயமடைந்தவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி மீனாட்சி, சஞ்சய், செந்தில், சந்தியா ஆகியோர் உயிரிழந்தனர். இந்நிலையில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த 4பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 1லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000, காயமடைந்தவர்களுக்கு ரூ.25,000 வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Leave a Response