ஸியோமி நிறுவனம்: Mi6 ரக ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்…

Xiaomi-Mi6
ஸியோமி நிறுவனம், அதன் மி6 என்ற புதிய ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை ஏற்கனவே கடந்த வாரம் ஸியோமி வெளியிட்டிருந்தது. அதன்படி, பல நவீன வசதிகளுடன்கூடிய மி6 ஸ்மார்ட்ஃபோனை இன்று பீஜிங் நகரில் நடைபெற்ற வர்த்தக நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது.

சர்வதேச சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் இந்த ஸ்மார்ட்ஃபோன் விரைவில் இந்திய சந்தையிலும் கிடைக்கப் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. ஸியோமி நிறுவனத்தின் முந்தைய மி5 ஸ்மார்ட்ஃபோனின் மேம்பட்ட வடிவமாக உள்ள மி6 ஃபோன், சாம்சங் கேலக்ஸி எஸ்8, எல்ஜி ஜி 6 ஸ்மார்ட்ஃபோன்களுக்குப் போட்டியாக இருக்கும் என, தெரிவிக்கப்படுகிறது.

இதன் விலை ரூ.20,500 முதல் தொடங்குகிறது.

சிறப்பம்சங்கள்:
5.15 இன்ச் ஹெச்டி தொடுதிரை, ஸ்னாப்டிராகன் 835 புராஸசர், 6ஜிபி ரேம், கைரேகை ஸ்கேனிங் வசதி, ஆன்ட்ராய்ட் 7.1.1 நவ்கட் மென்பொருள் இயங்குதிறன், 64 ஜிபி, 128 ஜிபி, 256 ஜிபி சேமிப்புத் திறன், 12 மெகாபிக்சல் பின்புற கேமிரா, 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமிரா (இரண்டுமே 4கே வீடியோ ரெக்கார்டிங் தொழில்நுட்பம் கொண்டவை),3350 mAh பேட்டரி ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும்.

மி6 ஸ்மார்ட்ஃபோன் பற்றி கூடுதல் விவரம் அறியவும், ஆன்லைனில் புக் செய்யவும் இங்கே சொடுக்கவும்.

இது மட்டுமின்றி, #Mi6Plus #MiMax2 ஃபேப்லட் உள்ளிட்டவையும் அறிமுகம் செய்யப் போவதாக, ஸியோமி தெரிவித்துள்ளது.

Leave a Response