தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் திறக்க முடியும்?: சித்தராமையா.

kar
கர்நாடக மாநிலத்தில் குடிக்க தண்ணீர் இல்லாத நிலையில், தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் திறக்க முடியும் என்று முதல்-மந்திரி சித்தராமையா கேள்வி எழுப்பி உள்ளார்.உலக தண்ணீர் தினத்தையொட்டி பெங்களூரு விதான்சவுதாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கர்நாடக முதல்- மந்திரி சித்தராமையா பேசினார்.

போதிய மழை இல்லாமல் கே.ஆர்.எஸ்., கபினி, ஹேரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகள் வறண்டு காணப்படுகிறது. இப்போது உள்ள சூழ்நிலையில் குடிநீருக்கு கூட அணைகளில் தண்ணீர் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.

இந்த நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நமக்கே குடிக்க தண்ணீர் இல்லாத நிலையில், தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் திறக்க முடியும் என்று கர்நாடக முதல்- மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.

Leave a Response