‘Android O’ டெவலப்பர் பிரீவியூ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு;-

andraid
கூகுள் I/O தேதியுடன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடுத்த பதிப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதன் டெவலப்பர் பிரீவியூ வழங்கப்பட்டுள்ளது.ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடுத்த பதிப்பு ஆண்ட்ராய்டு ஒ (Android O) என அழைக்கப்படும். இத்தகவலை கூகுள் நிறுவனத்தின் பொறியியல் பிரிவு தலைவர் டேவ் புர்க் உறுதி செய்துள்ளார்.

முதல் ஆண்ட்ராயடு ஒ டெவலப்பர் பிரீவியூ கட்டாயமாக தினசரி பயன்பாடுகளுக்கானது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் ஆண்ட்ராய்டு ஒ பதிப்பு நெக்சஸ் 5X, நெக்சஸ் 6P, நெக்சஸ் பிளேயர், பிக்சல், பிக்சல் XL, பிக்சல் C சாதனங்களுக்கு வழ்கப்படுகிறது. இதே போல் அணியக் கூடிய சாதனங்களுக்கான எமுலேட்டர் ஆண்ட்ராய்டு 2.0 இயங்குதளத்தில் வழங்கப்படும் என டேவ் புர்க் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டிற்கான கூகுள் I/O மே மாதம் நடைபெற இருக்கும் நிலையில் புதிய பதிப்பில் பல்வேறு வசதிகள் வழங்கப்படும் என்றும் பேட்டரி பேக்கப் நேரம் கூடுதலாக கிடைக்கும். இத்துடன் மல்டி டாஸ்கிங் செய்ய ஏதுவாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் பேட்டரி பேக்கப் குறையாது என அறிவிக்கப்பட்டுள்ளது . வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு சேனலின் பயன்பாடுகளை எளிதாக மாற்றியமைத்து கொள்ள முடியும். இதே போன்று பல்வேறு வசதிகள் புதிய பிரீவியூவில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Response