நடிகர் சங்க பொதுச்செயலாளர் மற்றும் நடிகருமான விஷால் நீயா நானானு பார்த்துக்கலாம் என தமிழ் ராக்கர்ஸ்க்கு சவால் விடுத்துள்ளார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை போல் நண்பனின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ‘சிம்பா’ படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீதர். இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடந்தது.
இந்த விழாவில் விழாவில் இயக்குநர்கள் மிஷ்கின், காந்திகிருஷ்ணா, வெங்கட் பிரபு நடிகர்கள் விஷால், ஜெயம் ரவி, பிரசன்னா, பிரித்வி பாண்டியராஜன், அரவிந்த், அஜய், நடிகைகள் சினேகா, தன்ஷிகா கலந்து கொண்டனர்.
எல்ல தடைகளையும் தாண்டி ரிலீஸ் ஆகும் எந்த படமும் கண்டிப்பா வெற்றி பெரும். தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலுக்கு பின் தான் இந்த படம் வெளியாகும். அந்த சமயத்தில் இந்த படம் எந்த இணையதளத்திலும் வெளியாகாது என நான் உறுதியா சொல்கிறேன். ஏப்ரல் 2க்கு பின் நீயா நானானுக்கு பாத்துக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.