சென்னையில் தொடரும் அவலநிலை!.. இதற்கு தீர்வு ?..

chennai
சென்னையில், வானுயர்ந்த அடுக்கு மாடி குடியிருப்புகள் இருந்தாலும்,ஆங்காங்கே சாலையோரங்களையும், அரசு இடங்களையும் ஆக்கிரமித்து, பலர் குடிசை, கூடாரம் போட்டு வசித்து வருவதும் தொடரத்தான் செய்கிறது.ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் செலவில், புதிய குடியிருப்புகளை கட்டினாலும், இந்த அவலம் இன்னும் தீரவில்லை.

படிக்கும் வயதில் உள்ள குழந்தைகள், சாலையோர ஆக்கிரமிப்பு குடிசைகளில், ஆடை இல்லாமல், உணவுக்கு கஷ்டப்படும் நிலையே, கண் முன் காட்சிகளாகவே உள்ளன.’இவர்களின் வாழ்வுக்கு எப்போது தான் தீர்வு கிடைக்கும்’ என, எண்ணியபடியே, நாம் வேதனையுடன் அவர்களை கடந்து செல்லும் சூழல் தான் உள்ளது.

அவர்களுக்கு அரசு வீடு கொடுத்தாலும் அவர்கள் அங்கு சென்று வசிப்பதில்லை. எதற்கு நீங்கள் இங்கு வாழனும் என்று கேட்கும்போது..’எங்கள் தொழில் இங்கு தானே உள்ளது’ அதனால் நாங்கள் இங்கயே வாழ்கிறோம் என்று எளிதாக பதில் கூறுகின்றனர்.அரசின் திட்டங்களுக்கும், மக்களின் தேவைக்கும் இடையே உள்ள இடைவெளியே, சிக்கலுக்கு காரணமாக அமைகிறதா என்று யோசிக்க வேண்டியதாய் உள்ளது.இந்த அவலநிலை மாறுமா? என்று இவர்களுக்கு தீர்வு கிடைக்கும்? அரசின் கவனத்துக்கு இது சென்றடையுமா??..

Leave a Response