தமிழ் தெரியாமல் தமிழ்படம் இயக்கிய இயக்குநர்…

Kombey Audio Launch
ஹாபிஸ் இஸ்மாயில் மலயாளத்தில் மூன்று படங்களை இயக்கி புகழ் பெற்றவர். தமிழ் மொழி மற்றும் தமிழ் படங்களின் மீது ஏற்பட்ட மோகத்தில் “கோம்பே” எனும் தமிழ் படம் ஒன்றை இப்போது இயக்கியுள்ளார்.

கதை, ஒளிப்பதிவு, DI, எடிட்டிங் என அனைத்து பணிகளையும் செய்து படத்தை இயக்கியுள்ளார் ஹாபிஸ் இஸ்மாயில். இப்படத்தில் இவர் வில்லன் பாத்திரத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேங்காயிலிருந்து நீரையும் காயையும் எடுத்தபின் கீழே போடப்படும் கழிவை கோம்பே என்பார்கள். மனித வாழ்க்கை அப்படித்தான் உயிர் இருக்கும் வரை தான் இந்த உடலுக்கு மரியாதை என்பதை அடிப்படையாக கொண்டது தான் இந்தப்படம்.

காசுக்காக கொலை செய்யக் கூட தயங்காத ஒருவன் தனக்கு வரும் காதலால் எப்படி மாறுகிறான் என்பது தான் இந்தப்படத்தின் கதை. முற்றிலும் புது முகங்கள் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ல்ளார்கள். தேனியை சுற்றியுள்ள பகுதிகளில் முழு படத்திற்கான படப்பிடிப்பினையும் நடத்தியுள்ளனர்.

சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் முன்னனிலையில் இசையை வெளியிட்டது படக்குழு. அப்போது பேசிய இயக்குநர், தான் தமிழ் தெரியாமல் இந்தப்படத்தை இயக்கிய கதையை கூறினார். தமிழ் மொழி தெரியாததால் ஷீட்டிங்கில் நிறைய களேபரங்கள் நடந்ததாம். டயலாக் சொல்லித் தருவது, ஷீட்டிங்கை சமாளிப்பது என எல்லாத்தையும் உதவி இயக்குநர்களின் உதவியுடன் சமாளித்திருக்கிறார் இயக்குனர் ஹாபிஸ் இஸ்மாயில்.

படத்தின் காட்சிகள் நேர்த்தியாக இருப்பதாக கிடைத்த பாரட்டில் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது படக்குழு.

Leave a Response