ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு இயக்கத்தினர் தில்லியில் உண்ணாவிரதப் போராட்டம்

whatsapp-image-2017-01-05-at-9-51-32-amதமிழர் பாரம்பரியங்களில் ஒன்றாக விளங்கும் ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரியும், Peta-வைக் கண்டித்தும் ‘ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு இயக்க’த்தினர் தில்லியில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் கூறியதாவது,

whatsapp-image-2017-01-05-at-9-51-36-am“தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் பல்வேறு அமைப்புகளில் இருந்து உண்ணாவிரதம் மேற்கொள்வதற்காக வந்திருக்கிறோம். ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு இயக்கம் இந்த போராட்டத்தை ஒருங்கிணைக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்வதாகக் மத்திய அரசு கூறுகிறது. ஆனால் இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு மத்திய அரசு அவசர சட்டம் இயற்றும் வரை நாங்கள் தொடர்ந்து  உண்ணாவிரதம் இருப்போம்.” என கூறியுள்ளார்.whatsapp-image-2017-01-05-at-9-51-35-am

whatsapp-image-2017-01-05-at-9-51-35-am-1

Leave a Response