“‘காவிரி’ – நம் அனைவர்க்கும் சொந்தமானது….” என்ற கருத்தை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தி உள்ளது தென் இந்தியாவின் சிறந்த டிஜிட்டல் சேனலான ‘புட் சட்னி’

unnamed
‘காவிரி’ பிரச்சினையின் பின்னணியில் இருக்கும் குறைகள், உண்மையான சம்பவங்கள் ஆகியவற்றை பற்றி உணர்ச்சிகரமாக கூறியிருக்கிறது  தென் இந்தியாவின் சிறந்த யூத் சேனலான ‘புட் சட்னி’ வெளியிட்டிருக்கும்  ‘ஷாரிங் ரிவர் காவிரி’ என்னும் காணொளி. தமிநாட்டுடன் காவிரி நீரை கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்வதாக கர்நாடக்கா கூறி இருந்தது… ஆனால் காவிரி நீரை பகிர்ந்து கொள்வதற்கு  எதற்காக இத்தகைய வன்முறை, வெறுப்பு, அரசியல் மற்றும் பகை…
மூன்று நாடுகள் எந்த வித சண்டையும் இன்றி ‘நைல்’ நதியை பகிர்ந்து கொள்ளும் போது…, இஸ்ரேல் – பாலஸ்தீன் ஒரு நதியை நட்புறவுடன் பகிர்ந்து கொள்ளும் போது…, இந்தியா – பாக்கிஸ்தான் மற்றும் இந்தியா – பங்களாதேஷ் நாடுகள்  இரண்டு நதிகளை பகிர்ந்து கொள்ளும் போது…, நாம் ஏன் காவிரி நீரை நட்புறவுடன் பகிர்ந்து கொள்ள கூடாது… என்கின்ற கருத்தை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தி இருக்கிறது ‘புட் சட்னியின்’ இந்த காணொளி….சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி கொண்டிருக்கும்  ‘புட் சட்னியின்’ இந்த காணொளியானது, இதுவரை கேட்கப்படாத கேள்விகளையும், சொல்லப்படாத பதில்களையும் மக்களின் மனதில் விதைத்து இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=NYtPf7PEKNM

Leave a Response