சினிமாவுக்கு – வங்கி தொடங்க வேண்டும் – எஸ்.பி.ஜனநாதன்

maxresdefault (1)

இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் குற்றம் – 23 திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை வெயில், வல்லினம் படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கியுள்ளார். நாற்பத்தி ஐந்து நாட்களில் படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும், அதே வேளையில் தரத்தில் குறை வைக்கவில்லை என்றார் அறிவழகன். இவ்விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தி பேசிய இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இந்நிகழ்ச்சியின் மூலமாக திரைப்பட உலகிற்கு வேண்டுகோள் ஒன்றை வைத்தார். இந்தியாவில் எல்லாதொழில்களுக்கும் வங்கி கடன் வசதி உண்டு. திரைப்பட தயாரிப்புக்கு சில வருடங்களுக்கு முன் குறிப்பிட்ட சில வங்கிகள் கடன் கொடுக்க தொடங்கின. குறிப்பிட்ட சில நபர்களுக்கு மட்டும் அக் கடன் கிடைத்தது. சாமான்யர்களுக்கும் படம் தயாரிக்க வங்கி கடன் கிடைக்க திரைப்பட துறையே “சினிமா வங்கி ” தொடங்க வேண்டும். 500 கோடி வைப்பு தொகைஇருப்பதாக ரிசர்வ் வங்கிக்கு கணக்கு காட்டினால் தனியார் வங்கி தொடங்கலாம் என்கின்றனர். ரிசர்வ் வங்கி கூடுதல் நிதியை வழங்கும் .எனவே தமிழ் திரையுலகம் ஒன்று கூடி சினிமா தொழிலுக்கு வங்கி தொடங்க ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றார்.

Leave a Response