மீண்டும் ஒரு காதல் கதை – விமர்சனம்

image

மீண்டும் ஒரு காதல் கதை – விமர்சனம்

மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியாகி பட்டைய கிளப்பிய திரைப்படம் தான் “தட்டத்தின் மரையத்தே” இந்த திரைப்படத்தின் தமிழ் பதிப்பகம் தான் இந்த திரைப்படம் இந்த திரைப்படத்தை அச்சு பிசுங்காமல் காப்பி பேஸ்டு செய்துள்ளார் இயக்குநர்.

கலைப்புலி தானு இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகின்றார்

படத்தின் கதையை பெருத்தவரை இந்து முஸ்லிம் காதல் இந்த ஒரு வரியை வைத்துதான் இந்த படம் நகர்கின்றது படம் ஆரம்பத்தில் ஹீரோ ஒரு முஸ்லிம் பென்னை பார்த்து கடவுளே இந்த பென்னை எப்படியாவது எனக்கு கல்யாணம் பன்னிவையின்னு சொல்லி வேண்டிக் கொள்கிண்றான் அதற்கு பிறகு கதை ஆரம்பம் ஆகின்றது..

திரைப்படம் மெல்ல மெல்ல நகர்ந்தாலும் நமக்கு சலிப்பு தட்டாமல் இருக்க சில விஷயங்களை இயக்குநர் கதையில் சுவாரசியமாக கூறியுள்ளார் அவர்க்கு பாராட்டுக்கள்.

ஹீரோவுக்கு இது முதல் படமாக இருந்தாலும் அவரின் நடிப்பு அதை சுத்தமாக நாம்மை மரக்கடிக்க வைத்து விட்டார் அவரின் அடுத்தடுத்த படங்களுக்கு வாழ்த்துக்கள்.

ஹிரோயின் ஹிஷா தலவார் முதலில் இவர் முஸ்லிம் பெண் போலவே தெரியவில்லை இவரை எப்படி இயக்குநர் தேர்வு செய்தார் என்று தெரியவில்லை ஆனால் நடிப்பை பெருத்தவரை நம்மை அவரின் அழகில் மூழ்கடித்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

காமெடிக்கு பஞ்சம் இல்லை படத்தில் நமக்கு சலிப்பு தட்ட ஆரம்பிக்கும் போது எல்லாம் அவர்கள் தான் நம்மை மீண்டும் இருக்கையில் அமர வைத்தனர் எனவே அதற்கு அவர்களுக்கு நன்றி.

இசையை பெருத்தவரை ஜீ.வி.பிரகாஷ் சுமாரான வேலையை தான் செய்துள்ளார் என்று கூற வேண்டும். என்னதான் மலையாள படத்தின் ரிமேக் என்றாலும் அதுக்குன்னு சும்மா மலையாள பாட்டா சுட்டு போட்டுவிட்டார் ஜீ.வி.

மொத்ததில் இந்த காதல் கதை மலையாளத்து மம்பட்டியான் அரைத்து வைத்த மாவை மாற்றமே இல்லாமல் அரைத்து வைத்துவிட்டனர்..

Leave a Response