பாலிவுட்டுக்கு போகிறார் அஜித்..!

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த 2013ஆம் வருடம் தீபாவளிக்கு வெளியான ‘ஆரம்பம்’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் அஜித்துடன் நயன்தாரா, ஆர்யா, டாப்சி, ராணா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

தற்போது இந்தப்படம் ‘பிளேயர் ஏக் கில்லாடி’ என்கிற பெயரில் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு அடுத்தமாத இறுதியில் வெளியாக இருக்கிறது. முதலில் இந்தப்படம் ரீமேக் செய்வதாகத்தான் சொல்லப்பட்டது. பின் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, தற்போது அப்படியே டப்பிங் செய்துவிட்டார்கள்..