ஆனந்தம் கிடைக்குமா ஆனந்திக்கு..!

‘பொறியாளன்’ படத்தில் கதாநாயகி நடித்த ரக்ஷிதாவை அப்படியே கொஞ்சம் ஞாபகத்துக்கு கொண்டு வாருங்கள்.. இப்போது ஜஸ்ட் அவரது பெயரை ஆனந்தி என மாற்றிவிட்டு நினைத்துப்பாருங்கள்.. அவர் தான் பிரபு சாலமன் இயக்கிவரும் ‘கயல்’ படத்தின் கதாநாயகி என்பது தெரிந்துவிட்டதா..?

ஓகே.. நம்ம லட்சுமி மேனன் பிரபு சாலமனின் கும்கியில் அறிமுகமானாலும் அவர் இரண்டாவதாக நடித்த ‘சுந்தரபாண்டியன்’ முதலில் வந்து பிரபலப்படுத்தி விட்டது. அதேபோல ஆனந்தி பிரபு சாலமனின் ‘கயல்’ படத்தில் நடித்தாலும் ‘பொறியாளன்’ முந்திக்கொண்டுவிட்டது.

இதுதவிர தற்போது வெற்றிமாறன் இயக்கிவரும் ஒரு மணி நேர படமான ‘விசாரணை’யிலும் ஆனந்தியை நடிக்கவைக்க முயற்சிகள் நடக்கிறது. அட்டகத்தி தினேஷ் இந்தப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். ஆக லட்சுமிமேனன் போல பிரபு சாலமன் மூலம் இவருக்கும் அதிர்ஷ்டக்க்று வீசுமா என பார்த்து விடலாம்.