நர்ஸ் ட்ரெய்னிங் எடுத்தார் ஸ்ரீதிவ்யா…!

தற்போது ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஸ்ரீதிவ்யாவின் பக்கம் தான் பல தயாரிப்பாளர்களின் பார்வையும் திரும்பியுள்ளது. இத்தனைக்கும் இவர் நடித்து இரண்டு படங்களே வெளியாகியுள்ளது. தற்போது ‘பென்சில்’, ‘டாணா’, ஈட்டி’, ‘வெள்ளைக்கார துரை’ என தமிழ்சினிமாவில் கவனமாக அடியெடுத்து வைக்கிறார் ஸ்ரீதிவ்யா.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தற்போது துரைசெந்தில்குமார் இயக்கத்தில் ‘டாணா’ படத்தில் அவர் நடித்துவருகிறார். இந்தப்படத்தில் நர்ஸாக நடிக்கிறார் ஸ்ரீதிவ்யா.. இதற்காக இரண்டு நர்ஸ்களை சந்தித்து அவர்களிடம் பயிற்சி எடுத்துக்கொண்டாராம் ஸ்ரீதிவ்யா.