விநாயகருக்கும் திலகருக்கும் என்ன சம்பந்தம்..?

விநாயகரும் பாலகங்காதர திலகருக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்ன..? இருக்கிறது என்கிறார் இயக்குனர் கரு பழனியப்பன்.. அப்படி அவர்சொன்னது ‘திலகர்’ என்ற பெயரில் தயாராகி இருக்கும் படத்தின் இசைவெளியீட்டு விழாவில்..

இன்று காலை ‘திலகர்’ படத்தின் இசைவெளியீட்டு விழா சாந்தம் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அமீர், சமுத்திரகனி, கரு.பழனியப்பன், சீனு ராமசாமி, ஸ்ரீகாந்த், நமீதா, இனியா, விஜய்சேதுபதி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

பெருமாள் பிள்ளை இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு ‘தமிழ்படம்’ கண்ணன் இசையமைத்துள்ளார். அறிமுக கதாநாயகனாக துருவா மற்றும் முக்கிய வேடத்தில் கிஷோர் நடிக்க, கதாநாயகியாக மிருதுளா பாஸ்கர் நடித்திருக்கிறார். இந்தப்படத்தை கலைப்புலி தாணு வெளியிடுகிறார்.

விழாவில் இயக்குனர் கரு.பழனியப்பன் பேசும்போது, “இன்று காலையில் இந்த ‘திலகர்’ படத்தின் இசைவெளியீட்டு விழாவிற்கு வரும் வழியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த பல விநாயகர் சிலைகளை பார்த்தேன்..

விநாயகருக்கும் திலகருக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. சுதந்திர போராட்டம் ஆரம்பித்த காலகட்டத்தில் தலைவர் பாலகங்காதர திலகர், விநாயகருக்கு ஒரு விழா எடுத்து அதன மூலம் மக்களை ஒருங்கிணைத்து சுதந்திர தாகத்தை மக்களுக்கு ஏற்படுத்தினார். அவர் ஏற்படுத்திய அந்த நடைமுறை தான் இப்போது விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது” என்றார்.. அட இது உண்மையிலேயே புதுசா இருக்கே..