கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட மர்ம ஆசாமி… கே.கே.நகரில் விபரிதம்..

WhatsApp Image 2018-02-06 at 10.40.50 AM

கே.கே.நகரில் கல்லால் அடித்து மர்ம ஆசாமி சாவு கொலையா?
சென்னை கே.கே.நகரில் எல்லைக்குட்பட்ட 103, JD Serinity Homes APP (front) , அண்ணா மெயின் ரோடு கே.கே.நகர் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடப்பதாக போலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து காவல் துறை உடலை கைப்பற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த நிலையில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் தலையில் கல்லால் அடித்து கொலை செய்திருக்கின்றனர் என்றும் போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இறந்த நபர் அழுக்கு குமார் , குப்பை பொருக்கிற நபராக இருக்கலாம் என தெரிய வருகிறது. தலையில் கல்லால் அடித்து கொலை செய்த மர்ம ஆசாமியை போலிஸ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறது.

Leave a Response