Did “Pasanga” Pandiraaj cheat his “Marina” partner Balamurugan – Is Director Cheran backing Balamurugan? இயக்குனர் “பசங்க” பாண்டிராஜ் “மெரீனா” திரைபடத்தில் தன் கூட்டாளியை ஏமாற்றினாரா? – கூட்டாளி பாலமுருகனுக்கு பிரபல இயக்குனர் துனை நிற்கிறாரா?

இயக்குனர் “பசங்க” பாண்டிராஜ் “மெரீனா” திரைபடத்தில் தன் கூட்டாளியை ஏமாற்றினாரா? – கூட்டாளி பாலமுருகனுக்கு பிரபல இயக்குனர் துனை நிற்கிறாரா?

Did “Pasanga” Pandiraaj cheat his “Marina” partner Balamurugan – Is Director Cheran backing Balamurugan?

இயக்குனர் சேரன் மற்றும் சசிகுமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர் “பசங்க” திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகியவர் பாண்டிராஜ். “பசங்க” திரைப்படத்தை முதலில் இயக்குனர் சேரன் தயாரிப்பதாக இருந்து, ஒரு வருடம் கழித்து அந்த முயற்சி தோல்வி அடைந்தது. பின்னர் பாண்டிராஜ் இந்த கதையை தூக்கிக்கொண்டு அடுத்த தயாரிப்பாளரை தேடிகொண்டிருந்தார், வேட்டையில் சிக்கியது மோசர்பேர் கம்பெனி. இன்று யு.டி.வி’யில் இருக்கும் தனஞ்செயன் அன்று மோசர்பேர் கம்பெனியில் முதன்மை அலுவலராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. “பசங்க” திரைப்படத்தின் கதையை கேட்ட தனஞ்செயன் கதை மீதும் பாண்டிராஜ் மீதும் ஈர்ப்பு ஏற்பட்டு “பசங்க” திரைப்படத்தை தயாரிப்பதாக பாண்டிராஜிடம் வாய்மொழி ஒபந்தம் செய்தார். சினிமாவின் உள்குத்து காரணமாக நாளடைவில் மோசர்பேர்’யில் இருந்து நழுவியது “பசங்க”.

தோல்விகளின் வெறுப்போடு இருந்த இயக்குனர் பாண்டிராஜுக்கு, இயக்குனர் என்ற அந்தஸ்தை கொடுத்தார் “பசங்க” திரைப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் சசிகுமார். “பசங்க” திரைப்படம் வெற்றி, தேசிய விருது, என படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் அனைவராலும் பேசப்பட்டார். அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பேரன் அருள்நிதி’யை “வம்சம்” என்னும் திரைப்படம் மூலம் அறிமுகபடுத்தி வெற்றி பெற்றார். பாண்டிராஜ்’யின் மூன்றாவது இயக்கம் “மெரீனா”. இந்த திரைப்படத்தை பாண்டிராஜ் மற்றும் அவர் நண்பர் பாலமுருகன் என்பவர் இனைந்து தயாரிக்க ஆரம்பித்தனர். “மெரீனா” திரைப்படத்தின் இந்த தயாரிப்பாளர் கூட்டணியில் சிலநாள் கழித்து விரிசல் ஆரம்பித்து பாண்டிராஜ் மற்றும் பாலமுருகன் பிரிந்தனர். “மெரீனா” படம் முடிவுற்று திரையிடும் நேரத்தில், பாண்டிராஜ் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் பாலமுருகன். நீதிமன்றம் நிபந்தனையின்படி பாண்டிராஜ் ருபாய் பதினைந்து லட்சத்தை பாலமுருகனுக்கு கொடுத்து, “மெரீனா” படம் தடையின்றி வெளியிடப்பட்டது.

“மெரீனா” வெற்றி, பாலமுருகனை பாண்டிராஜிடம் லாபம் கேட்க உறுத்த, அவருக்கு துணை நின்றார் இயக்குனர் சேரன். என்னடா பாண்டிராஜ் சேரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்தானே என நமக்கு தோணும். ஆமாம் அது உண்மை, காரணம் சேரன் தான் தயாரிக்க நினைத்த “பசங்க” திரைப்படத்தை வேறு ஒருவர் மூலம் தயாரித்தது! மோசர்பேர் தயாரிக்க இருந்த “பசங்க” திரைப்படம் அங்கிருந்து நழுவியதற்க்கு காரணம் சேரன் தான் என சினிமா வட்டாரத்தில் அன்று பேசப்பட்டது.

“மெரீனா” பங்கு பிரச்சனை பற்றி பாண்டிராஜிடம் கேட்க, அவர் பாலமுருகன் மற்றும் கூட்டணி பிரச்னை பற்றி பின்வருமாறு தொலைபேசி மூலமாக விவரித்தார். பாலமுருகன் பாண்டிராஜிடம் “மெரீனா” திரைப்படம் தயாரிப்பதற்கு முன்பு, ருபாய் பத்து லட்சம் கடனாக பெற்றுள்ளதாக தெரிவித்தார். “மெரீனா” திரைப்படம் தயாரிக்கும் பொழுது பான்டிராஜுடன் பாலமுருகன் இணைத்தயாரிப்பாளராக சேர்க்கப்பட்டார் எனவும் தெரிவித்தார். பட தயாரிப்பின்போது பாலமுருகன் தான் வாங்கிய கடன் பாத்து லட்சத்தை தவணை முறையில் “மெரீனா” திரைப்படத்திற்கு செலவு செய்ததாகவும் கூறினார். இவருடைய “மெரீனா” தயாரிப்பில் சாம்பசிவன் என்பவர் மேனேஜராக பணியாற்றியதாகவும் அந்த சாம்பசிவமும் பாலமுருகனும் தயாரிப்பு கணக்குகளில் தில்லு முள்ளு செய்ததாகவும் தெரிவித்தார். பாலமுருகன் நீதிமன்றத்தை அணுகியபோது தான் அவருக்கு ருபாய் பதினைத்து லட்சத்தை முதல் தவணையில் கொடுத்ததாகவும், இரண்டாவது தவணையாக பாலமுருகன் ஒத்துக்கொண்ட ருபாய் பதினைந்து லட்சத்தை பணமாகவும், காசோலையாகவும் கொடுத்து சுமூகமாக வழக்கை முடிக்க முற்பட்டப்போது, திடீரென்று பாலமுருகன் வாங்க மறுத்ததாகவும் அவர் பின்னால் யாரோ ஒருவர் தவறான அறிவுரை கூறுவதாகவும் தெரிவித்தார்.

பாண்டிராஜ் கூறியதை பற்றி சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில் பாலமுருகனுக்கு இயக்குனர் சேரன் முழு மூச்சாக துணை நிற்கிறார் என்பது அரசல்-புரசலாக தெரிகிறது. சேரனுக்கு “பசங்க” படத்தை, தான் தயாரிக்க முடியவில்லையே என்று பாண்டிராஜ் மீது கோபமா? அல்லது சேரனுக்கும் பாண்டிராஜுக்கும் வேறு ஏதாவது முன் விரோதமா?? என்பது அவர்களுக்கு தான் தெரியும்.

இந்த பண பிரச்னை விரைவில் முடிந்து! சேரனும் பாண்டிராஜ்’யும் இனைந்து!! ஒரு நல்ல படம் கொடுத்தால் சரி!!!