ரீல்ஸ் மோகத்தால் கணவனை கவனிக்காத மனைவி: கழுத்தில் கத்தியை இறக்கிய கணவன்!

கர்நாடக மாநிலம் ஹிலியானா கிராமத்தில் கணேஷ் புஜாரி (42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ரேகா (27) என்ற மனைவி இருந்துள்ளார்.
இதில் ரேகா ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்த நிலையில், சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்தார். இவர் வேலை நேரம் தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் ரீல்ஸ் வீடியோ பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
அவர் எப்போதுமே செல்போனும் கையுமாக இருந்ததால் அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவ நாளில் கணேஷ் வேலைக்கு சென்றுவிட்டு மிகவும் கோபமாக வீட்டிற்கு வந்தார். ஆனால் தன் கணவன் வந்ததை கூட கவனிக்காமல் ரேகா செல்போனில் வீடியோ பார்த்தபடி சிரித்துக் கொண்டிருந்தார். இது கணேசுக்கு மேலும் கோபத்தை தூண்டியது. அவர் கோபத்தில் தன் மனைவியை திட்டிய நிலையில் இருவருக்கும் இடையே சண்டை வாக்குவாதமாக மாறியது.
ஒரு கட்டத்தில் கோபம் தலைக்கேறிய கணேஷ் தன் மனைவியை வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கழுத்தில் குத்தி கொடூரமாக கொலை செய்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ரேகாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் கணேஷை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
