ஓரினச்சேர்க்கைக்கு ஒத்து வராததால் சிறுவனை கொன்ற கயவன்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே 5 வயது சிறுவன் இறந்த நிலையுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கருமாங்கழனி கிராமத்தில் பீகாரைச் சேர்ந்த நீரஜ் குமார் மற்றும் காஜல் குமாரி தம்பதியுடன் தங்களது மகன் ஆரவ் குமார் (5) வசித்து வந்தார். கடந்த ஜூன் 9ஆம் தேதி சிறுவன் காணாமல் போனதையடுத்து, அவரது தாய் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு சிறுவனை தேடிவந்தனர். இதற்கிடையே, அதே கிராமத்தில் உள்ள அடர்ந்த முட்புதரில், ஆரவ் குமார் சடலமாக அழுகிய நிலையில் மீட்கப்பட்டார். ஆரம்பத்தில், தவறி விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்ததாக போலீசார் சந்தேகித்தனர். இருப்பினும், அருகில் உள்ள குடியிருப்பின் முன் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், ஒரு இளைஞர் சிறுவனை அழைத்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவன் கொலை: அசாம் இளைஞர் கைது
அதன் அடிப்படையில், அசாமைச் சேர்ந்த போல்தேவ் (22) என்பவர் கைது செய்யப்பட்டார். போலீசார் விசாரணையில், ஓரினச்சேர்க்கை முயற்சியை சிறுவன் நிராகரித்ததையடுத்து, போல்தேவ் அவனை முட்புதருக்குள் அழைத்துச் சென்று கல்லால் அடித்துக் கொன்றதாக வாக்குமூலம் வழங்கியதாக தெரிகிறது. தற்போது போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் அண்மைக்காலமாக பல்வேறு வகையான குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தாக்குதல், ஆள் கடத்தல், போதைப்பொருள் விநியோகம், கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் போன்றவை தொடர்ந்து அதிகரிக்கின்றன. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த அவசரத்தையும், அரசின் கண்காணிப்பு பொறுப்பையும் வலியுறுத்தி வருகின்றனர்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
