ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நந்தவனப்பட்டி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணன் (19) என்ற மகன் இருக்கிறார்.
இவர் ஒரு டாட்டு போடும் மையத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் தினமும் ஷேர் ஆட்டோவில் வேலைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அப்போது அவர் ஒரு 11ஆம் வகுப்பு மாணவியுடன் பழகினார். அந்த மாணவிக்கு 15 வயது ஆகும் நிலையில் ஷேர் ஆட்டோவில் செல்லும்போது சரவணன் அவருடன் பழகினார்.
சரவணன் அந்த மாணவியிடம் காதலிப்பதாக கூறி ஆசை வார்த்தைகளை பேசி பழகி வந்த நிலையில் கடந்த வாரம் பள்ளிக்கு சென்ற சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி பேருந்து நிலையத்தில் வைத்து கடத்தி சென்றார். பின்னர் அவர் மாணவியை பல்வேறு ஊர்களுக்கு அழைத்துச் சென்று தனி அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் கடைசியில் திருச்சியில் தங்கி இருந்தார்.
இதற்கிடையில் மாணவியின் பெற்றோர் தங்கள் மகளை காணாததால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் திருச்சியில் இருப்பது தெரியவந்த நிலையில் அங்கு சென்று மாணவியையும் வாலிபரையும் பிடித்தனர். இந்த வழக்கு மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவர்கள் சரவணன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த நிலையில் மாணவியை காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
