மனைவி மட்டுமில்லாமல் கொழுந்தியாளுக்கும் ஆசைப்பட்ட கணவன்: இறுதியில் நடந்த முடிவு!

ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்திலுள்ள பகுதியில் ஷீனு (25) ரீது (23) என்ற இரு சகோதரிகள் வசித்து வருகிறார்கள்.
அதில் ஷீனுவின் கணவரின் தம்பி சுனில் என்பவர் ஷீனுவின் தங்கையான ரீதுவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். தனது குடும்பத்தினரிடம் சென்று ரீதுவை திருமணம் செய்து வைக்குமாறு கேட்டபோது குடும்பத்தினர் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த சுனில் ஷீனு மற்றும் ரீதுவை கொலை செய்ய திட்டம் தீட்டினார். இந்நிலையில் சகோதரிகள் இருவரும் ரயில் நிலையத்திலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்ததை அறிந்த சுனில் அவர்களை பின் தொடர்ந்தார். அப்போது திடீரென அவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்ட நிலையில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அதன் பின் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ஷீனு மற்றும் ரீதுவை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவர்களின் நிலைமை மோசமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக தற்போது ரோஹத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை நடைபெற்று வரும் நிலையில் துப்பாக்கி சூடு நடத்திய சுனிலை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
