Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இளம் பெண்ணை தனது அலுவலகத்திற்கு கூட்டிவந்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பாஜக பிரமுகர்! வைரலாகும் வீடியோ!

On May 26, 2025
n6658329861748249286028bd92bad044a9e2330ad480622d351426a48fdefef8d4e5d8559ab20868325cfe
Share

உத்திர பிரதேசம் மாநிலத்தில் பாஜக பிரமுகர் அமர்க்காசியம் என்பவர் தனது அலுவலகத்தில் ஒரு இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வைரலானதை அடுத்து, அம்மாநில பாஜக தலைவர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த வீடியோவை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது என்றும், இது கட்சியின் பெயருக்கு களங்கம் எனக் கருதப்படுவதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில பொதுச் செயலாளர் கோவிந்த நாராயண் ஷுக்லா தெரிவித்துள்ளார்.

"இந்த வீடியோ கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி உள்ளது. மாநிலத் தலைவர் உத்தரவின் பேரில், ஏழு நாட்களுக்குள் எழுத்துப் பதிலளிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதிலளிக்க தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

அமர் காஷ்யப் இதுகுறித்து விளக்கம் அளித்தபோது, 'அந்த பெண் எங்கள் கட்சியின் உறுப்பினர். அவருக்கு உடல்நலம் இல்லாததால் ஓய்வெடுக்க இடம் தேவை' என்று கேட்டேன், எனவே நான் அவரை அலுவலகத்துக்கு அழைத்து வந்தேன்" என்றார்.

ஆனால் சிசிடிவி காட்சியின்படி அந்த பெண் காரில் இருந்து இறங்குவது படம் பிடிக்கப்பட்டுள்ளது. பிறகு, அவர் மாடியில் ஏறும்போது, காஷ்யப் அவரை பின் தொடர்ந்து சென்று தோளில் கை வைக்கிறார், பின் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார். சில நொடிகளில் அவர்கள் விலகிக்கொள்கிறார்கள்.

"அவருக்கு மயக்கம் வந்ததால், நான் கையை பிடித்தேன். அதை தவறாக பயன்படுத்துகிறார்கள். நாங்கள் எங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு உதவாமல் இருந்தால், யாருக்கு உதவுவது என அமர் காஷ்யப் கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.