zomato டெலிவரி ஊழியர் செய்த வேலை: குவியும் பாராட்டுக்கள்!

புனேயைச் சேர்ந்த தொழிலதிபரான ஸ்ரீபால் காந்தி சமீபத்தில் zomate ஊழியரை மையமாகக் கொண்ட மகிழ்ச்சியான அனுபவத்தை லிங்க்ட்ன்னில் பகிர்ந்துள்ளார்.
இது "வாழ்க்கைக்கான ஒரு பாடம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீபால் காந்தி, பனீர் டிக்கா சாண்ட்விச், சிப்ஸ் மற்றும் குக்கீக்கள் அடங்கிய ஒரு மதிய உணவை Zomato-வில் ஆர்டர் செய்திருந்தார். ஆனால் டெலிவரி வந்தபோது சாண்ட்விச் மட்டுமே கிடைத்தது.
தவறுதலைப் பற்றி அவர் கூறியதும், அந்த ஊழியர் உணவகத்தையோ Zomatoவையோ தொடர்பு கொள்ளலாம் என்று பரிந்துரை செய்தார். உணவகம் பிழையை ஒப்புக்கொண்டு, மீதமுள்ள பொருட்களை வரக்கூடியவரால் டெலிவரி செய்யலாம் என்றும், ரூ.20 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தது.
அந்த டெலிவரி ஊழியருக்கு மீண்டும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், அவர் உணவகத்துக்குச் சென்று மீதமுள்ள உணவுகளை பெற்று திரும்ப வந்தார். "வாடிக்கையாளர் சந்தோஷமாக இருக்கவேண்டும். அது என் பொறுப்பு," என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், ஸ்ரீபால் காந்தி அவருக்கு கூடுதல் பணமாக ₹20 வழங்க முயன்றபோதும், ஊழியர் அதை மறுத்து, "வேறொருவரின் தவறுக்காக நான் ஏன் பணம் பெற வேண்டும்? கடவுள் எனக்கு போதுமான அளவு கொடுத்திருக்கிறார்," என்று கூறியுள்ளார்.
பின்னர் நடந்த உரையாடலில், அந்த டெலிவரி ஊழியர், முன்னதாக ஒரு கட்டுமான மேற்பார்வையாளராக இருந்து மாதம் ₹1.25 லட்சம் சம்பாதித்து வந்ததாகவும், ஒரு மோசமான விபத்தில் இடது கை, கால் செயலிழந்ததால் வேலையை இழந்ததாகவும் தெரிவித்துள்ளார். தற்போதெல்லாம் Zomatoவின் வாயிலாக அவர் தனது குடும்ப செலவையும், பல் மருத்துவம் படிக்கும் மகளின் கனவை நிறைவேற்றவும் உழைத்து வருகிறார்.
"நான் ஊனமுற்றவராக இருக்கலாம். ஆனால் Zomato எனக்கு வாழ்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. அந்த நிறுவனத்தின் பெயர் எந்த நிலையிலும் பாதிக்கப்பட அனுமதிக்க மாட்டேன்," என்ற அவரது வார்த்தைகள் சமூக வலைதளங்களில் பலரது உள்ளங்களை நெகிழச் செய்துள்ளன.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
