சிரிப்பு+ஆக்ஷன் சரவெடியில் அஜித், நோ பஞ்ச் டயலாக்!!

அட்டகாசம் படத்துக்கு பின் அஜித் மீண்டும் வேட்டி, சட்டையில் நடிக்கும் படம் “வீரம்”. முழுக்க, முழுக்க கிராமத்து மனிதராக, நான்கு தம்பிகளுக்கு அண்ணனாக நடித்துள்ளார் அஜித். தமன்னா நாயகியாக நடிக்க, சந்தானம், தம்பி ராமையா இருவரும் முக்கிய கதப்பத்திரத்தில் நடிக்கிறார்கள். பொங்கல் விருந்தாக வருகிறது வீரம்.
4 தம்பிகள் மீது பாசமழை பொழியும் அண்ணனாக வருவதால், படத்தில் காமெடி, சென்டிமென்ட்டுடன் கூடிய ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறதாம். மேலும் அஜீத் சிரிக்க வைக்கும் காமெடியிலும் ஒரு கை பார்த்திருக்கிறாராம். சந்தானம், அப்புக்குட்டி, வித்யுலேகா ராமன், மயில்சாமியுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி திரை அரங்கை சிரிப்பொலியில் அதிர வைக்கும் என்கிறார்கள்.
இந்த படத்தில் பஞ்ச் வசனங்கள் என்று ஒரு வார்த்தை கூட அஜித் பேசவில்லையாம். சிரிப்பு, சரவெடி தான் இந்த பொங்கல்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postசூர்யா படத்தில் மும்பை வில்லன்கள்!
