Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சூர்யா படத்தில் மும்பை வில்லன்கள்!

•On November 24, 2013
SANTHOSH-SIVAN-LINGU-SURIYA
Share
SANTHOSH-SIVAN-LINGU-SURIYA சூர்யா - லிங்குசாமி இணைந்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மும்பையில் தொடங்கியுள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு பாலிவுட் நடிகரான மனோஜ் பாஜ்பாயை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இவர் தமிழில் சமர் படத்தில் நடித்தவர்.  மற்றொரு வில்லனாக வித்யுத் ஜாம்வால் நடிக்கிறார். இவர் தமிழில் துப்பாக்கி, பில்லா 2 படங்களில் நடித்தவர். இவருக்கும் இணையான வில்லன் வேடமாம். சூர்யா-லிங்குசாமி இணைந்திருக்கும் இந்த படம் தொழில்நுட்ப ரீதியிலும், நடிகர்கள் அளவிலும் சிறப்பம்சங்கள் நிறைந்ததாக உருவாகி வருகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக ‘ரெட் டிராகன்’ என்ற அதிநவீன கேமராவை உபயோகித்து படமாக்குகின்றனர். வழக்கம் போல யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதுகிறார். ராம் கோபால் வர்மா இயக்கிய சத்யா என்ற இந்திப்பட பாணியில் படம் உருவாக இருப்பதால் மும்பை வில்லன்களையும் களமிறக்கி இருக்கிறார் லிங்குசாமி.  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.