யாரும் கிடைக்கலைனா சிம்புவுக்கு இந்தி ஹீரோயின் – கெளதம் முடிவு!!

அஜித்தை வைத்து கெளதம் மேனன் இயக்கும் படம் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அதற்கு முன் சிம்பு கெளதம் படத்தில் நடித்து வருகிறார். இந்த முறை அஜித் படத்தை தவறவிடக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்து வருகிறார் கெளதம். இதனால் ஜனவரிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து விட இரவு பகலாக படப்பிடிப்பு நடத்தி வருகிறார் கெளதம்மேனன். இப்போதுதான் கெளதம் மேனனை மீண்டும் சுறுசுறுப்பாக பார்க்க முடிகிறது.
அஜித் மற்றும் சிம்பு ஆகிய இருவரின் படங்களுக்கான கதாநாயகி வேட்டையையும் தற்போது தீவிரமாக நடத்தி வருகிறார். தற்போது சிம்பு நடிக்கும் காட்சிகளை படமாக்கி வரும் கெளதம் சீக்கிரமே நாயகியை இறுதி செய்து விடுவார். ஒருவேளை அவசரத்திற்கு கோலிவுட் முன்னணி நடிகைகள் யாரும் கிடைக்காவிடில் தெலுங்கு, இந்தி நடிகைகளை இறக்குமதி செய்யவும் முடிவெடுத்திருக்கிறார் கெளதம்மேனன்.
 ,Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postநட்புக்காக நடித்து கொடுக்கும் அஜித்!!
Next Postசூர்யா படத்தில் மும்பை வில்லன்கள்!
